மேலும் அறிய

Watch Video : என்ன க்யூட்டா பாடுறாங்கப்பா.. ப்பா வாய்ஸ்..தமிழில் பாடகியாக அறிமுகமாகும் மஞ்சு வாரியர்..!

நடிகை மஞ்சு வாரியர் தான் முதன் முதலில் சமீபத்தில் தமிழில் பாடிய பாடல் ஒன்றை பாடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகைகளுள் மஞ்சு வாரியரும் ஒருவர். இவர் சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். இளம் வயதிலேயே சினிமா துறையில் காலடி எடுத்து வைத்த மஞ்சு வாரியர் நிறைய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மலையாள சினிமாவின் முக்கிய நடிகரான திலீப்பை திருமணம் செய்து ஒரு மகள் இருக்கும் நிலையில் , கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார்.

40 + இல் இருக்கும் நடிகை மஞ்சு வாரியர் , இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு ஜொலித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் தனுஷுக்கு ஜோடியாக பச்சையம்மாள் என்னும்  கதாபாத்திரத்தில் அசுரன் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் கோலிவுட் பக்கம் மஞ்சு வாரியருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. 

மஞ்சு வாரியார் மலையாளத்தை தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்தநிலையில், மஞ்சு வாரியார் தான் முதன் முதலில் சமீபத்தில் தமிழில் பாடிய பாடல் ஒன்றை பாடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், " வணக்கம், நான் மஞ்சு வாரியார். எனது முதல் பின்னணி பாடல் இப்போ இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கிய சென்டி மீட்டர் படத்தில் வந்துருக்கு. உங்களுக்காக இரண்டு லைன் பாடுறேன். 

கிம் கிம் கிம் கிம் கிம் கிம் 

கனவில் இன்று மே மே மே மே 

நாதா! என் காதல் தேவதாஸ்

வராத வந்த நாதா 

சொந்தம் உள்ள பார்வையால் வந்தேன் உனக்கு 

கிம் கிம் கிம் கிம் கிம் கிம்" என்று பாடி மஞ்சு வாரியார் நன்றி தெரிவித்தார். 

மஞ்சு வாரியர் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அவர் பதிவிடும் புகைப்படங்கள்மற்றும் வீடியோக்கள் முற்றிலும் வித்தியாசமானதாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கின்றன. என்னதான் நடிகைகள் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்வது இயல்பான ஒன்றாக இருந்தாலும் மஞ்சு வாரியர் தனது புன்னகைக்குள் சில பாசிட்டிவ் மேஜிக்கை ஒளித்து வைத்திருக்கிறார்  என சொன்னால் மிகையில்லை.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Embed widget