Pandiyan Stores: வந்தாச்சு புது ‘முல்லை’...பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!
அண்ணன் - தம்பிகளின் பாசம், கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவம் போன்ற நெகிழ வைக்கும் காட்சிகள் அடங்கிய இந்த சீரியல் காண்போரை கண் கலங்க வைக்கும் அளவும் நெகிழ்ச்சியான காட்சிகள் நிறைந்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நடிகை காவ்யா அறிவுமணி விலகிய நிலையில், அவரது கேரக்டரில் நடிக்கும் புது நடிகை எப்போது வருவார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போது பார்வையாளர்கள் மத்தியில் தனி இடம் உண்டு. ரசிகர்களின் பேராதரவுடன் சென்று கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 - 8.30 வரை ஒளிபரப்பாகிறது. அண்ணன் - தம்பிகளின் பாசம், கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவம் போன்ற நெகிழ வைக்கும் காட்சிகள் அடங்கிய இந்த சீரியல் காண்போரை கண் கலங்க வைக்கும் அளவும் நெகிழ்ச்சியான காட்சிகள் நிறைந்தது.
இதனிடையே இந்த சீரியலில் கூட்டு குடும்பமாக இருந்த மூர்த்தி மற்றும் அவரது தம்பிகள் அதே ஒற்றுமையுடன் இருக்க அவர்களது மனைவிகளின் குடும்ப உறுப்பினர்களால் எழுந்த கருத்து வேறுபாடுகளால் குடும்பம் பிரிந்தது. இதனால் தனியாக சென்ற கதிர்-முல்லை புதிதாக ஹோட்டல் பிசினஸ் ஆரம்பித்த காட்சிகள் இடம் பெற்றது. மேலும் பாக்கியலட்சுமி- பாண்டியன் ஸ்டோர்ஸ் சங்கமம் என்ற பாணியில் கடந்த ஒரு வாரமாக இரு சீரியல்களும் ஒரு மணி நேர ஒளிபரப்பில் கலகலப்பாக சென்று வருகிறது.
View this post on Instagram
ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடங்கிய சில நாட்களிலேயே அது பிரபலமாக காரணமாக இருந்தவர் மறைந்த நடிகை விஜே சித்ரா. ஆனால் 2020 ஆம் ஆண்டு அவர் தற்கொலை செய்த பின் அந்த கேரக்டரில் நடிகை காவ்யா அறிவுமணி நடித்து வந்தார். குமரனுக்கு ஜோடியாக அவர் நடித்து வந்த நிலையில் காவ்யாவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது.
even Google isn't this accurate in Image Search. She looks like a copy of her. Very much identical, compare to previous replacements.#Lavanyaa #Mullai #Kaavyaarivumani#PandianStores #VijayTV @VijayTelevision pic.twitter.com/5RfupcPK5F
— Kapilan Sachchithananthan (@iamkapilan) October 15, 2022
அதனை அவர் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அந்த கேரக்டரில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. அதன்படி சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்து பிரபலமான லாவண்யா தான் நடிக்கிறார். அந்த வகையில் இன்று ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லாவண்யாவின் காட்சிகள் இடம் பெறுகிறது.