Kangana Ranaut: அட.. இந்த முன்னணி நடிகருக்கு ஜோடியா... மீண்டும் கோலிவுட்டில் களமிறங்கும் கங்கனா ரணாவத்!
மலையாள இயக்குநரின் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் முன்னணி தமிழ் நடிகருக்கு ஜோடியாக நடிக்க கங்கனா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரணாவத். இந்தியில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவர், தற்போது உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக நடிகர் மாதவனின் படித்தில் இவர் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கெனவே தமிழில் வெளியான ‘தலைவி’ படத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், மலையாள இயக்குநர் விபின் இயக்கத்தில் உருவாக உள்ள த்ரில்லர் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கங்கனா ரணாவத் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன் என வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அசத்தி வருகிறார். இவரின் இயல்பான நடிப்பை ரசிக்காதவர் இருக்க முடியாது என்றே சொல்லலாம். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பால குமாரா திரைப்படத்தில் இவர் சென்னை பையனாக கச்சிதமாக பொருந்தி இருப்பார். அதே போன்று சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திலும் ஒரு வித்தியாசமான கதாப்பத்திரத்தை ஏற்று நடித்து அசத்தி இருந்தார் விஜய் சேதுபதி. அதற்கு தேசிய விருதும் பெற்றார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தனது மாஸான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் விஜய் சேதுபதி. இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு இணையானதாக இருக்கும். இப்படி தன்னுடைய நடிப்புத் திறமையால் ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் விஜய் சேதுபதி நடிகை கங்கனா ரணாவத்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அவரின் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் படிக்க,