Manipur Violence: வெறிபிடித்த கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க ஒன்றிணைய வேண்டும் - மம்தா பானர்ஜி
Manipur Violence: மணிப்பூர் கலவரத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது குறித்த வீடியோ இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Manipur Violence: மணிப்பூர் கலவரத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது குறித்த வீடியோ இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜீ தனது ட்விட்டர் பக்கத்தில், ”வெறிபிடித்த கும்பலால் இரண்டு பெண்களை கொடூரமாக நடத்துவதைக் காட்டும் மணிப்பூரின் கொடூரமான வீடியோவைக் கண்டு மனம் உடைந்தது மட்டுமில்லாமல் கோபமடையச்செய்கிறது. விளிம்புநிலைப் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளைக் கண்டு அடைந்த வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் புரிந்து கொள்ள முடியாதவகையில் உள்ளது மற்றும் மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டதாக உள்ளது. குற்றவாளிகளின் இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்களைக் கண்டித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Heartbroken and outraged to witness the horrific video from Manipur showing the brutal treatment of two women by a frenzied mob.
— Mamata Banerjee (@MamataOfficial) July 20, 2023
No words can express the pain and anguish of witnessing the violence inflicted on marginalized women. This act of barbarism is beyond comprehension…