மேலும் அறிய

VJ Chitra: நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் விடுதலை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தமிழில் பிரபல நடிகையாக திகழ்ந்த சித்ராவின் மரண வழக்கில், அவரது காதல் கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழில் திரைப்படங்களில் மட்டுமின்றி சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் பிரபலமான சின்னத்திரை நடிகையாக உலா வந்தவர் சித்ரா. இவர் கடந்த 2020ம் ஆண்டு மர்மமான முறையில் ஓட்டல் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

சித்ரா கணவர் விடுதலை:

அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். சித்ராவின் மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் மீது சந்தேகம் இருப்பதாக சித்ராவின் குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர்.

இந்த சூழலில், அவரது மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் விடுவிக்கப்படுவதாக திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஹேம்நாத்திற்கு எதிராக உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் நீதிபதி கூறினார்.

தற்கொலையா? கொலையா?

தமிழில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக திகழ்வது விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிக மிக பிரபலமான தொடர் ஆகும். இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் சித்ரா. இவர் நடித்த முல்லை என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிக மிக வரவேற்பை பெற்றது ஆகும். இந்த சூழலில், கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

2013ம் ஆண்டு நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் தமிழின் பிரபல தொலைக்காட்சிகளான ஜெயா டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியவர். இவர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

படப்பிடிப்பிற்காக ஹோட்டலில் தங்கியிருந்த சித்ராவுடன் அவரது காதல் கணவர் ஹேமந்த்குமாரும் தங்கியிருந்தார். ஹேமந்த்குமார் வௌியே சென்றிருந்த நேரத்தில் உள்ளிருந்து கதவு தாழிட்டிருந்ததால், கதவை திறக்குமாறு சித்ராவை அழைத்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் எந்த பதிலும் வராததால் விடுதி ஊழியர் உதவியுடன் மாற்று சாவியை பயன்படுத்தி திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

இதை வழக்காக போலீசார் பதிவு செய்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இருவரும் ஏற்கனவே பதிவுத்திருமணம் செய்து கொண்டதாக தெரியவந்தது. ஹேம்நாத் மீது சித்ரா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அவரை காவல்துறை கைது செய்தது. பின்னர், அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், அவரை விடுதலை செய்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget