ABP EXCLUSIVE: ‘மனநல பிரச்னையில் அவதிப்பட்டேன்...’ அபர்ணா பாலமுரளி சிறப்பு பேட்டி!
மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை கேட்பதை தாழ்வாக கருத வேண்டாம் என்று நடிகை அபர்ணா பாலமுரளி பேசியிருக்கிறார்.
மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை கேட்பதை தாழ்வாக கருத வேண்டாம் என்று நடிகை அபர்ணா பாலமுரளி பேசியிருக்கிறார்.
இது குறித்து ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு பிரேத்யமாக அளித்த பேட்டியில், “ மனஅழுத்தம் அதிகமாக உங்களை தொந்தரவு செய்யும் போது நீங்கள் உடனே மனநல மருத்துவரை நாடுவதுதான் நல்லது. நீங்கள் என்னதான் மனநலபிரச்னை தொடர்பாக, உங்களுடன் அல்லது உங்களின் நண்பருடனும் உரையாடினாலும், நீங்கள் அதற்கான ஒரு மருத்துவரை நாடும் பட்சத்தில் உங்களுக்கு அது அதிகமாக உதவும்.
நான் கொரோனா காலத்தில் மனம்நலம் சார்ந்த பிரச்னைகளில் சிக்கினேன். நான் உடனே ஒரு மனநல மருத்துவரை சந்தித்தேன். அவரிடம் என்னுடைய பிரச்னைகளை சொல்லி, என்ன செய்ய முடியும் என்பதை கேட்டேன். அவர் எனக்கு நிறைய பயிற்சிகளை கொடுத்தார்.அந்த பயிற்சிகளை செய்த போது என்னால் அதிலிருந்து எளிதாக வெளியே வரமுடிந்தது. இந்த விஷயத்தில் அய்யோ நான் மனநல மருத்துவரை சந்திக்கிறேனே என்ற தாழ்வுமனப்பான்மை கொள்ள தேவையில்லை.அவர்கள் நமக்கு உதவி செய்வதற்காகத்தான் இருக்கிறார்கள். நமக்குத் தெரியாத பல விஷயங்கள் அவர்களுக்குத் தெரியும்.” என்றார்.
தமிழில் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகை அபர்ணா பாலமுரளி முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். அதே போல அந்தப்படத்தில் நடித்த நடிகர் சூர்யா, படத்தின் இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ்குமார், படத்தின் இயக்குநர் சுதாகொங்கரா, சிறந்த படத்திற்காக விருது என மொத்தம் 5 பிரிவுகளில் இந்தப்படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டன.
View this post on Instagram
இந்தப்படத்திற்கு பிறகு தமிழில் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி நடித்த வீட்ல விஷேசம் படத்தில் நடித்திருந்தார் அபர்ணா. இந்தப்படமும் ஹிட் அடித்த நிலையில், தற்போது நித்தம் வானம் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்தப்படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடித்துள்ள நிலையில், துணை கதாபாத்திரங்களாக நடிகைகள் ரித்துவர்மா மற்றும் ஷிவாத்மிகா நடித்துள்ளனர். இந்தப்படத்தை இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கி இருக்கிறார்.
நித்தம் ஒரு வானம் படத்தை ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளது. சென்னை, சண்டிகர், மணலி, கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் கொல்கத்தா என உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்த நிலையில், படம் வரும் நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் உள்ளது.