Amritha Birthday: “இன்னா மயிலு டூ மாட்டிக்கிட்டேன்” அம்ரிதாவின் டாப் 5 பாடல்களின் லிஸ்ட்!

தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் இப்போது நடித்து வருகிறார்.இன்று பிறந்தநாள் காணும் அம்ரிதா நடித்துள்ள திரைப்படங்களில் இருந்த டாப் பாடல்களின் லிஸ்ட் இதோ!

பிகில் படத்தில் ‘தென்றல்’ கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு பரிச்சியமான முகமானார் நடினை அம்ரிதா. பிகிலுக்கு முன்பு சில படங்களில் நடித்துள்ள அவர், தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் இப்போது நடித்து வருகிறார்.இன்று பிறந்தநாள் காணும் அம்ரிதா நடித்துள்ள திரைப்படங்களில் இருந்த டாப் பாடல்களின் லிஸ்ட் இதோ!

1. பாடல் : மாட்டிக்கிட்டேன் ; திரைபடம்: படைவீரன்

இயக்குனர் தனா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். விஜய் யேசுதாஸ், அம்ரிதா, பாரதி ராஜா ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் 2018-ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தின் ஆல்பத்தில் வரும் அனைத்து பாடல்களும் கவனிக்க வைத்தாலும், “மாட்டிக்கிட்டேன்” பாடல் மிகவும் பிரபலமானது. தனா வரிகள் எழுத, ஹரிசரன் மற்றும் ரீட்டா இப்பாடலை பாடியுள்ளனர். 

2. பாடல் : நீலி நீலி ஆகாசம் ; திரைபடம்: 30 ரோஜுலோ பிரேமின்சதாம் இலா

தமிழ் படம் மட்டுமல்ல தெலுங்கு பட பாடல்களும் இங்கு பரிந்துரை செய்யப்படும். அம்ரிதா கரியரில் முக்கியமான படமான ‘30 ரோஜுலோ பிரேமின்சதாம் இலா’  செம ஹிட்டான படம். அம்ரிதாவுக்கு டோலிவுட்டில் இது அறிமுக படம். அனுப் ரூபன்ஸ் இசையில், சந்திரபோஸ் வரிகளில், சித் ஶ்ரீராம் மற்றும் சுனிதா ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். யூட்யூபில் இதுவரை 25 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது இப்பாடல்.3. பாடல் : மீக்கோ தண்டம் ; திரைபடம்: 30 ரோஜுலோ பிரேமின்சதாம் இலா

அதே, 30 ரோஜுலோ பிரேமின்சதாம் இலா திரைப்படத்தில் வரும் மற்றொரு பாடலும் செம ஹிட்டானது. “மீக்கோ தண்டம்” என்ற இந்த பாடலுக்கு சேகர் மாஸ்டர் கோரியோகிராபி செய்துள்ளார்.4. பாடல் : இத்தன நாளா யாரும் ; திரைபடம்: வணக்கம்டா மாப்பிள்ளை

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தி, ஜி.வி பிரகாஷ், அம்ரிதா, டேனியல் ஆகியோர் நடித்துள்ளனர். ஒடிடியில் வெளியான இத்திரைப்படத்திற்கு ஜி.வியே இசையமைத்துள்ளார். இதில் வரும் “இத்தன நாளா யாரும்” பாடல் இன்ஸ்டிகிராம் ரீல்ஸ் ரசிகர்கள் மற்றும் வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் வைக்கும் காதலர்கள் மத்தியம் ஹிட். இரண்டு வாரம் முன்புதான் இப்பாடலின் வீடியோ யூட்யூபில் வெளியானது. 

5. பாடல் : இன்னா மையிலு ; திரைபடம்: லிஃப்ட்

இயக்குநர் வினித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லிஃப்ட’ படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில் அடுத்ததாக “இன்னா மயிலு” என்ற பாடல் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. பிரிட்டோ மைக்கே இசையில் சிவகார்த்திகேயன், பூவையார் இணைந்து பாடியிருக்கும் பாடலுக்கு நிஷாந்த் வரிகள் எழுதியுள்ளார்.தற்போது லிரிக் வீடியோ மட்டுமே வெளியாகியுள்ளது. யூட்யூப் டிரெண்டில் உள்ள இந்த பாடல், இளைஞர்கள் மத்தியில் ரிப்பீட் மோடில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Tags: youtube music kollywood Birthday amritha

தொடர்புடைய செய்திகள்

சீதா கதாபாத்திரத்தில் கரீனா கபூர் கன்ஃபார்ம்?! எவ்வளவு சம்பளம் கேட்டாங்க தெரியுமா?

சீதா கதாபாத்திரத்தில் கரீனா கபூர் கன்ஃபார்ம்?! எவ்வளவு சம்பளம் கேட்டாங்க தெரியுமா?

Sruthihaasan | தொகுப்பாளராகிறாரா ஸ்ருதிஹாசன்?

Sruthihaasan | தொகுப்பாளராகிறாரா ஸ்ருதிஹாசன்?

Anushka Shetty News | இளம் நாயகனுடன் கைகோர்க்கும் பிரபல நாயகி அனுஷ்கா ஷெட்டி

Anushka Shetty News | இளம் நாயகனுடன் கைகோர்க்கும் பிரபல நாயகி அனுஷ்கா ஷெட்டி

Bigg Boss 15 | பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறாரா பூமிகா?

Bigg Boss 15 | பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறாரா பூமிகா?

Rhea Allegations | சாரா தான் கஞ்சா கொடுத்தார் - ரியா குற்றச்சாட்டை மறுக்கும் பாலிவுட் நடிகர்!

Rhea Allegations | சாரா தான் கஞ்சா கொடுத்தார் - ரியா குற்றச்சாட்டை மறுக்கும் பாலிவுட் நடிகர்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : உருமாறிய கொரோனாவுக்கு எதிரானதா கோவாக்சின்? ஆய்வு என்ன சொல்கிறது?

Tamil Nadu Coronavirus LIVE News : உருமாறிய கொரோனாவுக்கு எதிரானதா கோவாக்சின்? ஆய்வு என்ன சொல்கிறது?

பட்டியலின மக்களை கோவிலுக்குள் விடாமல் தடுத்த சம்பவம் : அமைச்சருக்கு கடிதம் எழுதிய ரவிக்குமார் எம்.பி.,

பட்டியலின மக்களை கோவிலுக்குள் விடாமல் தடுத்த சம்பவம் : அமைச்சருக்கு கடிதம் எழுதிய ரவிக்குமார் எம்.பி.,

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!

தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!