மேலும் அறிய

Aishwarya Lekshmi: விஜய் ஜெயிக்கணும்.. ரொம்ப ஆசையா இருக்கு.. ஐஸ்வர்யா லட்சுமி பிரார்த்தனை!

இந்த தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. அதற்கு காரணம் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வருகை தான். இந்த தேர்தலில் அக்கட்சி என்ன மாதிரியான தாக்கத்தை உண்டாக்கப் போகிறது என சஸ்பென்ஸாக உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற வேண்டும் என தான் ஆசைப்படுவதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். 

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (மே 4) எண்ணப்படுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் நிலையில் எந்த கட்சி ஜெயிக்கும், எந்த கட்சியின் வாக்குகள் பிரியப் போகிறது, பெரும்பான்மை கிடைக்குமா என்ற கேள்விக்கெல்லாம் விடை இன்னும் ஒரு நாளில் தெரிந்து விடும். வழக்கத்தை விட இந்த தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. 

அதற்கு காரணம் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வருகை தான். தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்து நம்பர் 1 நடிகராக திகழும் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற அறிவிப்பு வெளியானபோதே மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. பல தடைகளை தாண்டி தேர்தலையும் விஜய் சந்தித்துள்ளார். அவருக்கு பரப்புரையின்போது செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் வரவேற்பு அமோகமாக இருந்தது. 

கலையுலகைச் சேர்ந்த பலரும் விஜயை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரித்தனர். சிலர் தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டனர். இப்படியான நிலையில் நெல்லையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா லட்சுமியிடம் விஜயின் அரசியல் தாக்கம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்குது. எனக்கு விஜய் அண்ணாவை ரொம்ப பிடிக்கும். கேரளாவில் இருப்பதால் எனக்கு இங்கு ஓட்டு இல்லை என்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. என்னுடைய நண்பர்கள் பலரும் விஜயின் ரசிகர்கள் தான். அவருக்கு ஓட்டு போட முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. விஜய்க்கு வாழ்த்து, பிரார்த்தனைகள் எல்லாம் இருக்குது. விஜய் பேசும் வார்த்தைகள் கேட்கும்போது,  அரசியல் பற்றி பேசாதவர்கள் எல்லாம் இன்றைக்கு பேசத் தொடங்கியுள்ளார்கள். விஜய் அரசியலுக்கு வருவதற்கு எந்த நோக்கமும் இல்லை.  ஆனால் மக்களின் அன்பும், ஆதரவும் இருக்கிறது. அவருக்கு இருப்பதால் தான் அரசியலுக்கு வந்துள்ளார்.

விஜய் எனக்கு இவ்வளவு கொடுத்த மக்களுக்கு நான் நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என சொல்கிறார். அதை நான் வரவேற்கிறேன். எனக்கு அவர் சொன்னதை பார்க்கும்போது ரொம்ப உணர்ச்சிகரமாக இருக்கிறது. விஜய் தேர்தலில் வெற்றி பெற வர வேண்டும் என்ற ஆசை இருக்குது. அதற்காக என் வாழ்த்துகளையும், பிராத்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கும் அதே ஆசை இருப்பதை நான் ஊடகங்கள் வாயிலாக பார்க்கிறேன். எனினும் இதைப் பற்றி மக்கள் தான் பேச வேண்டும். நான் பேசக்கூடாது” என ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Embed widget