மேலும் அறிய

சொந்த வேலைக்காக அரசு நிகழ்வை ஒத்தி வைத்தாரா முதல்வர் விஜய்? சிங்கப்பெண் துவக்கவிழா ரத்தானது ஏன்?

தமிழக முதல்வர் விஜய் தனது மேலாளர் ஜகதீஷின் இல்ல விழாவில் கலந்துகொள்வதற்காக சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட துவக்க விழாவை ஒத்தி வைத்தாரா என்கிற விமர்சனம் எழுந்துள்ளது

தமிழக முதல்வர் விஜய் கடந்த மே 29 ஆம் தேதி தனது செயலாளர் ஜகதீஷ் பழனிச்சாமியில் புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்டார். ஆனால் இதே நாளில் முதல்வர் தலைமையில் துவக்கிவைக்கப்பட இருந்த சிங்கப்பெண் அதிரடி படை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் முதல்வர் விஜய் தனது சொந்த வேலைக்காக அரசு நிகழ்வை ஒத்திவைத்தாரா என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. 

இரண்டாவது முறை ரத்தான சிங்கப்பெண் அதிரடி படை திட்டம் 

பெண்களை பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சிங்கப்பெண் அதிரடி திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தார். முதல்வராக பொறுப்பேற்றபோது கையெழுத்திட்ட கோப்புகளில் ஒன்றுதான் இந்த சிங்கப்பெண் அதிரடி திட்டம். கடந்த 26 ஆம் தேதி ஐஜி தலைமையில் இந்த திட்டம் துவக்கிவைக்கப்பட இருந்தது. இதே நாளில் முதல்வர் விஜய் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்ற காரணத்தால் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 29 ஆம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்னம் மைதானத்தில் இந்த திட்டம் துவக்கிவைக்கப்பட இருந்தது. முதல்வரே நேராக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்த திட்டத்தை துவக்கி வைக்க இருந்த லையில் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டது. இதற்கு காரணமாக தமிழகத்திற்கு புதிய டிஜிபி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் இதனால் சிங்கப்பெண் அதிரடி திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதே திட்டத்தை துவங்கி வைக்க இருந்த நேரத்தில் முதல்வர் விஜய் தனது தனிச் செயலாளர் மற்றும் ரூப் பிஆர் ஏஜன்சியின் உரிமையாளரான ஜகதீஷ் அவர்களின் வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்டுள்ளது பெரும் பேசுபொருளாகியுள்ளது 

ஜகதீஷ் இல்ல விழாவில் முதல்வர் விஜய் 

விஜய் நடிகராக இருந்தபோது அவரிடம் பல ஆண்டுகளாக மேனேஜராஜ பணியாற்றியவர் தான் ஜகதீஷ் பழனிச்சாமி. சினிமாவில் இருந்து ஓய்வுபெற்று விஜய் அரசியலுக்கு வரவே ஜகதீஷ் ரூட் என்கிற நட்சத்திர பிஆர் ஏஜன்சி ஒன்றை நடத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் , அனிருத் , கீர்த்தி சுரேஷ்  , கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இந்த ஏஜன்சியில் உறுப்பினர்களாக உள்ளனர். ஜகதீஷ் தற்போது நீலாங்கரையில் பல கோடி மதிப்புள்ள வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டு குடிபுகும் விழாவில் முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். வழக்கமான கோட் சூட் அணியாமல் முதலவர் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சிங்கப்பெண் அதிரடி திட்டம் துவக்க நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு இதுதான் காரணமா என தவெக ஆதரவாளர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். 

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் விதமாக ஒரு ஐஜி தலைமையில் ஒரு எஸ்.பி மற்றும் 2 டி.எஸ். பி, 4 காவல் ஆய்வாளர்கள் , 8 எஸ்.ஐ- க்கள் மற்றும் 20 காவலர்கள் இந்த சிறப்பு படையில் இடம்பெறுவார்கள் என அரசாணையில் குறிப்பிடப்பட்டது. முதல்வர் விஜயின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த குழு செயல்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
" மரமண்டையா இருக்கியேனு திட்டுவது எவ்ளோ பெரிய தப்பு " விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர் உருக்கம்
விருதுநகர் மக்கள் கவனத்திற்கு... வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு !
விருதுநகர் மக்கள் கவனத்திற்கு... வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு !
மதுரை மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார்: பாரபட்சமற்ற விசாரணை கோரி டிஐஜியிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு !
மதுரை மாநகராட்சி ரூ.200 கோடி முறைகேடு புகார்: பாரபட்சமற்ற விசாரணை கோரி டிஐஜியிடம் அதிமுக கவுன்சிலர்கள் மனு !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget