மேலும் அறிய

Yogi Babu: ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் இயக்குநருடன் இணையும் யோகி பாபு; படப்பிடிப்பு தீவிரம்

ஒரு கிடாவின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை ஆகிய படங்களை இயக்கி தன் மீது தனி கவனம் ஈர்த்த சுரேஷ் சங்கையா இயக்கும் அடுத்த படத்தில் யோகி பாபு நடிக்கின்றார்.

இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் நடிகர் யோகிபாபு நடிக்கும் படத்தினை டிஸ்னி+ ஹாஸ்டார் தயாரிக்கின்றது. 

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த படைப்பாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படத்தை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார், லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். 

முன்னதாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியான  “ஒரு கிடாவின் கருணை மனு” மற்றும் “சத்திய சோதனை” படங்கள் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த புதிய திரைப்படத்தின் அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியில் நல்ல படம் உறுதி என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

RB Talkies சார்பில் S.R. ரமேஷ் பாபு மற்றும் Box office studios சார்பில் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. படம் குறித்து நடிகர் யோகி பாபு கூறுகையில், "சுரேஷ் சங்கையாவின் ஒரு கிடாவின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை ஆகிய படங்களை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த படங்கள் . அவருடைய படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருந்தேன், அந்த அதிர்ஷ்டகரமான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.

இது டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படைப்பாகும். மேலும் வரும் காலங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் பல தரமான கதையம்சமுள்ள படைப்புகளில் நான் தொடர்ந்து நடிப்பேன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்" என்றார். 

படம் குறித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா கூறுகையில், "இந்த வாய்ப்பை வழங்கிய டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி.  இந்த படத்தின் திரைக்கதை அனைத்து பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில், அசத்தலான பொழுதுபோக்குடன்,  பரபரப்பான ரோலர் கோஸ்டர் அனுபவமாக இருக்கும். மேலும் இப்படத்தில் சமூகத்திற்குத் தேவையான அவசியமான செய்தியும் இருக்கும்" என்றார்.

படம் குறித்து நடிகை லவ்லின் சந்திரசேகர் கூறுகையில், "இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் அற்புதமான திரைக்கதையில் நடிப்பது மகிழ்ச்சி.  இப்படத்தில் நான் அழகான மற்றும் தைரியமான இளம் பெண்ணாக நடிக்கிறேன். ஒரு  மிகச்சிறந்த திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி" என்றார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆளுநர் மாளிகையில் பரபர.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு எதிராக புகார் அளிக்க சென்ற பாதிக்கப்பட்ட மாணவி
ஆளுநர் மாளிகையில் பரபர.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு எதிராக புகார் அளிக்க சென்ற பாதிக்கப்பட்ட மாணவி
IPL LSG Win: ஷாருக்கான், ருதர்ஃபோர்ட்டின் அதிரடி வீண் - கோட்டை விட்ட குஜராத் - 33 ரன்களில் லக்னோ வெற்றி
ஷாருக்கான், ருதர்ஃபோர்ட்டின் அதிரடி வீண் - கோட்டை விட்ட குஜராத் - 33 ரன்களில் லக்னோ வெற்றி
IPL LSG Vs GT: மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் அதிரடி;  235 ரன்களை குவித்த லக்னோ - டார்கெட்டை எட்டுமா குஜராத்
மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் அதிரடி; 235 ரன்களை குவித்த லக்னோ - டார்கெட்டை எட்டுமா குஜராத்
TN School Reopening: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது.? வெளியான முக்கிய தகவல்
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது.? வெளியான முக்கிய தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Alliance | ”அதிமுகவுடன் கூட்டணி இல்லை” விஜய் உருவாக்கும் மாற்று அணி! ஆதவ் போட்ட ஸ்கெட்ச்!Annamalai BJP | வாயை விட்ட அண்ணாமலை.. off செய்த அமித்ஷா! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி! | ADMKதலைமை ஆசிரியை அராஜகம்?ஆசிரியர்களுக்கு மன உளைச்சல்! போராட்டத்தில் குதித்த மாணவிகள்Chengalpattu Police Chasing | 15 கி.மீ தூரத்திற்கு லாரியில் தொங்கிய காவலர் சினிமா பாணியில் கொள்ளை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆளுநர் மாளிகையில் பரபர.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு எதிராக புகார் அளிக்க சென்ற பாதிக்கப்பட்ட மாணவி
ஆளுநர் மாளிகையில் பரபர.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு எதிராக புகார் அளிக்க சென்ற பாதிக்கப்பட்ட மாணவி
IPL LSG Win: ஷாருக்கான், ருதர்ஃபோர்ட்டின் அதிரடி வீண் - கோட்டை விட்ட குஜராத் - 33 ரன்களில் லக்னோ வெற்றி
ஷாருக்கான், ருதர்ஃபோர்ட்டின் அதிரடி வீண் - கோட்டை விட்ட குஜராத் - 33 ரன்களில் லக்னோ வெற்றி
IPL LSG Vs GT: மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் அதிரடி;  235 ரன்களை குவித்த லக்னோ - டார்கெட்டை எட்டுமா குஜராத்
மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் அதிரடி; 235 ரன்களை குவித்த லக்னோ - டார்கெட்டை எட்டுமா குஜராத்
TN School Reopening: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது.? வெளியான முக்கிய தகவல்
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது.? வெளியான முக்கிய தகவல்
Trump's Drama: ட்ரம்ப்பின் டகால்டி வேலை; இங்க ஒண்ணு சொல்றது அங்க ஒண்ணு சொல்றதுன்னு இருந்தா எப்படி பாஸ்.?
ட்ரம்ப்பின் டகால்டி வேலை; இங்க ஒண்ணு சொல்றது அங்க ஒண்ணு சொல்றதுன்னு இருந்தா எப்படி பாஸ்.?
TASMAC Scam: “வரிப் பணத்த யார் சுருட்டுனாலும் தப்புதான், மக்களுக்கு பதில் சொல்லியே ஆகணும்“ வெடித்த தமிழிசை
“வரிப் பணத்த யார் சுருட்டுனாலும் தப்புதான், மக்களுக்கு பதில் சொல்லியே ஆகணும்“ வெடித்த தமிழிசை
Modi on Indian Military: தீரமிக்க இந்திய முப்படைகளால் பாகிஸ்தான் மண்டியிட்டது - பிரதமர் மோடி ஆவேச பேச்சு
தீரமிக்க இந்திய முப்படைகளால் பாகிஸ்தான் மண்டியிட்டது - பிரதமர் மோடி ஆவேச பேச்சு
TN School Reopening: பள்ளிகள் திறப்பு எப்போது? தள்ளிப்போக வாய்ப்பு? அமைச்சர் அன்பில் சொன்னது என்ன?
TN School Reopening: பள்ளிகள் திறப்பு எப்போது? தள்ளிப்போக வாய்ப்பு? அமைச்சர் அன்பில் சொன்னது என்ன?
Embed widget