மேலும் அறிய

35 ஆவது பட டைட்டில் , திருமணம் , பிறந்தநாள்...வர்க் அவுட் வீடியோ போட்டு கம்பேக் கொடுத்த விஷால்

நடிகர் விஷால் தனது திருமணத்திற்காக தயாராகி வரும் நிலையில் கடுமையாக உடற்பயிற்சியில் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியிட்டுள்ளார்

நடிகர் விஷால் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். இதே நாளில் தான் சாய் தன்ஷிகாவுடன் தனது திருமணம் தேதியையும் அவர் தெரிவிக்க இருக்கிறார். இதனிடையில் கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது ஆரோக்கியத்தை மீட்டு வருகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

தனது ஆரம்ப கட்ட கரியரில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து கவனமீர்த்தவர் விஷால். செல்லமே,  திமிரு , தாமிரபரணி, சண்டைக்கோழி , என இளம் தலைமுறையினர் குறிப்பாக பெண்களின் ஆதர்ஷ நாயகனாக உருவானார் விஷால். நடிப்பில் இருந்து நடிகர் சங்க நிர்வாகம் , தனிப்பட்ட சர்ச்சைகள் அவரது மார்கெட் மெல்ல குறையத் தொடங்கியது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலுக்கு ப்ளாக்பஸ்டர் படமாக அமைந்தது.  கடந்த ஆண்டு சுந்தர் இயக்கிய மதகஜராஜா படம் இந்த வெற்றியை தொடர்ந்தது. 

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்த பல்வேறு கேள்விகள் இருந்து வந்தன. சினிமா நிகழ்ச்சிகளில் விஷால் மயங்கி விழுவதும் , பேசும்போது கை நடுங்குவதுமாக காணப்பட்டார். இதனை வைத்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளத்தில் பேசப்பட்டன. பாலாவின்  அவன் இவன் படத்தில்  விஷால் நடித்ததது முதல் அவருக்கு உடல் ரீதியான பிரச்சனை இருந்து வந்ததாக சிலர் கூறினர். தீவிர மதுப்பழக்கத்தால் விஷாலின் உடல் நிலை மோசமாகிவிட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் அவரது திருமணம் குறித்த நெருக்கடியை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் தான் விஷால் சாய் தன்ஷிகா தங்கள் காதலை அறிவித்தனர். 

விஷால் 35

அடுத்தபடியாக விஷாலின் 35 ஆவது படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. ரவியரசு இப்படத்தை இயக்குகிறார். ஈட்டி , ஐயங்கரன் ஆகிய படங்களை இயக்கியவர் . சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும்  99 ஆவது படம் இது. துஷாரா நாயகியாக நடிக்க , அஞ்சலி , தம்பி ராமையா , அர்ஜய் பிற கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த ஜூலை மாதம் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது ஊட்டியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டைட்டில் நாளை ஆகஸ்ட் ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது

 

 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget