மேலும் அறிய

மதுபோதையில் தகராறு செய்த இயக்குநர் ? படத்தை காப்பாற்ற இயக்குநர் அவதாரமெடுத்த விஷால்

ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வந்த மகுடம் படத்தை தற்போது விஷாலே இயக்கி வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது

ரவி அரசு இயக்கத்தில் விஷால் மகுடம் என்கிற படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குநருக்கும் விஷாலின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. அண்மையில் மகுடம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது ஆனால் இந்த முறை படத்தை விஷாலே நடித்து இயக்குவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது

மகுடம் படத்தின் இயக்கும் விஷால்  

விஷாலின் 35 ஆவது படமாக சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 99 ஆவது படமாக மகுடம் திரைப்படம் அறிவிக்கப்பட்டது. ஈட்டி , ஐயங்கரன் ஆகிய படங்களை இயக்கிய ரவி அரசு இந்த படத்தை இயக்கி வந்தார் . துஷாரா நாயகியாக நடிக்க , அஞ்சலி , தம்பி ராமையா , அர்ஜய் பிற கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த ஜூலை மாதம் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ஊட்டியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. ஆகஸ்ட்  மாதம் படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. துறைமுகத்தை மையமாக வைத்து விறுவிறுப்பான கேங்ஸ்டர் திரைப்படமாக இப்படம் உருவாக இருந்தது. இப்படத்திற்காக விஷால் கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு தன்னை தயார்படுத்திக்கொண்டார். 

இப்படியான நிலையில் படத்தின் இயக்குநர் ரவி அரசுடன் விஷாலுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் மகுடம் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை படக்குழு மறுத்ததோடு படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்படவில்லை என்று தெரிவித்தது. இப்படியான நிலையில் மகுடம் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. தற்போது இப்படத்தில் விஷால் நடிப்பதோடு அவரே படத்தை இயக்கியும் வருவதாக தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. விஷால் படத்தின் காட்சிகளை இயக்கும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன

மது போதையில் தகராறு செய்த இயக்குநர்

மகுடம் படத்தின் இயக்குநர் ரவிஅரசு படப்பிடிப்பின் போது தொடர்ச்சியாக மது அருந்திவிட்டு வந்து மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் இதனால் படப்பிடிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. படப்பிடிப்பு நின்றுவிடக் கூடாது என்பதற்காக விஷால் இயக்குநருக்கு ஆதரவாக பேசி படப்பிடிப்பை தொடர முயற்சித்ததாகவும்  ஆனால் இயக்குநர் ரவி அரசு மது போதையில் தொடர்ந்து மற்ற கலைஞர்களுடன் பிரச்சனைகளில் ஈடுபட்டதால் வேறு வழியின்றி படத்தை தானே இயக்க விஷால் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget