மேலும் அறிய

விக்ரமே சொல்லிட்டாரு! பாலிவுட் ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய 4 தமிழ் படங்கள் இதுதான்!

பாலிவுட் ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய 4 தமிழ் திரைப்படங்களின் பெயர்களை நடிகர் விக்ரம் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். தனது தனித்துவமான அபாரமான நடிப்பால் தனக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தங்கலான் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில், நடிகர் விக்ரம் யூ டியூப் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவரிடம் தொகுப்பாளர் எந்த 4 தமிழ் படங்களை இந்தி ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்? என்று கூறுவீர்கள் என்று கேட்பார்.

விக்ரம் சொன்ன 4 படங்கள்:

அதற்கு பதிலளித்த விக்ரம், “ மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன். இந்த படம் காட்பாதர் படத்தைப் போன்றது. இது ஒரு சுயசரிதை  போல இருக்கும். இந்த படம் நடிக்கும்போது கமல்ஹாசனுக்கு 34 அல்லது 35 வயதுதான் இருக்கும். ஆனால், அவர் 62 வயது நபராக நடித்திருப்பார்.

16 வயதினிலே திரைப்படம். இது முழுக்க முழுக்க கிராமத்து படம். கிராமத்து வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்பதை காட்டிய திரைப்படம். ஸ்ரீதேவி, கமல் நடித்திருப்பார்கள். வில்லனாக ரஜினிகாந்த் நடித்திருப்பார். எனக்கு என்னுடைய வசனங்கள் கூட நினைவில் இருக்காது. ஆனால், அந்த படத்தின் வசனங்கள் இன்னும் நினைவில் இருக்கிறது.

ரஜினிகாந்த் அந்த படத்தில் தான் எதிர்கால சூப்பர்ஸ்டார் என்பதை நிரூபித்திருப்பார். அற்புதமான படம். ரீமேக் செய்ய வேண்டும் என்றால் அந்த படத்தில் கமல்ஹாசன் நடித்த கதாபாத்திரத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்றே சொல்ல வேண்டும். அதேபோல, நான் நடித்த ராவணன் படத்தை பார்க்க வேண்டும் என்று சொல்வேன். இது மிகவும் சுவாரஸ்யமான படம்.  உதிரிப்பூக்கள் படத்தையும் கூறுவேன்.”

இவ்வாறு அவர் பேசியிருப்பார்.

ப்ளாக்பஸ்டர் படங்கள்:

விக்ரம் குறிப்பிட்டுள்ள அனைத்து படங்களும் தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படங்கள் ஆகும். மணிரத்னத்தின் புகழையும், தமிழ் சினிமாவின் புகழையும், கமல்ஹாசன் திரை வாழ்வையும் உச்சத்திற்கு கொண்டு சென்ற திரைப்படத்தில் நாயகன் தவிர்க்க முடியாதது. 16 வயதினிலே திரைப்படம் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகிய 3 பேரின் நடிப்பால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் படம் இன்றளவும் இயக்குனர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget