Watch Video: மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற விஜயகுமார் பேத்தியின் திருமணம்... வைரலாகும் திருமண வீடியோ
Vijayakumar grand daughter marriage : நடிகர் விஜயகுமார் பேத்தி தியாவின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. அந்த திருமண வைபவத்தின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
![Watch Video: மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற விஜயகுமார் பேத்தியின் திருமணம்... வைரலாகும் திருமண வீடியோ Actor Vijayakumar grand daughter wedding video is out and grabbed the attention Watch Video: மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற விஜயகுமார் பேத்தியின் திருமணம்... வைரலாகும் திருமண வீடியோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/13d02951ea360a283a851b4de24cc9191708597037152224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் விஜயகுமார். கதாநாயகனாக அறிமுகமானாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் மிகவும் இயல்பாக நடிக்கக் கூடியவர். தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் அவ்வப்போது தலை காட்டுகிறார். இவரின் குடும்பமே நடிகர்களாக இருப்பது ஒரு தனி சிறப்பு.
இந்நிலையில், நடிகர் விஜயகுமார் பேத்தியின் திருமணம் கடந்த பிப்ரவரி 19ம் தேதி மிகவும் கோலாகலமாக, பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மகள் அனிதா விஜயகுமார் ஒரு மருத்துவராக இருக்கிறார். அவரின் கணவர் கோகுல் கிருஷ்ணனும் ஒரு மருத்துவர்.
கத்தாரில் செட்டிலான அனிதாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர்களின் மகள் தியாவும் ஒரு மருத்துவராக தான் இருக்கிறார். இந்நிலையில் விஜயகுமாரின் பேத்தி தியாவுக்கு மிகவும் பிரமாண்டமாக மகாபலிபுரம் பீச் ரிசார்ட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. வனிதாவைத் தவிர ஒட்டுமொத்த குடும்பமும் இந்தத் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
தியா திருமண விழா கடந்த ஒரு வார காலமாகவே களைகட்டியது. ரஜினிகாந்த், கே. எஸ். ரவிக்குமார், பாக்யராஜ், மீனா, விக்னேஷ் சிவன், நயன்தாரா, சினேகா என ஏராளமான திரை நட்சத்திரங்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மெஹந்தி, ஹல்தி, ரிசெப்ஷன், வெட்டிங் பார்ட்டி என தனித்தனியாக செட் போடப்பட்டு கோடிக்கணக்கில் செலவு செய்து திருமண ஏற்பாடுகள் கிராண்டாக செய்யப்பட்டன. அட்டகாசமான அலங்காரம் அனைவரின் கண்களையும் விரியவைத்தன. மிகவும் ட்ரெடிஷனலாக நடைபெற்ற இந்த திருமண வைபவத்தில் நண்பர்கள், உறவினர், விஐபிக்கள், விவிஐபிக்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
View this post on Instagram
தியா - திலன் திருமணத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதே போல திருமணத்திற்கு பிறகு நடத்தப்பட்ட டான்ஸ் பார்ட்டியில் மணமகனும், மணமகளும் சேர்ந்து கலக்கலாக டான்ஸ் ஆடிய வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. இத்தனை ஆடம்பரமான திருமணமா என வாய் பிளக்கிறார்கள் ரசிகர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)