Vijay Sethupathi: "என்னை ஏமாற்றியவர் வெற்றிமாறன்" .. விடுதலை பட விழாவில் விஜய் சேதுபதி பேச்சால் அதிர்ச்சி..!
வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் நடிப்பதை தவறவிட்டுவிட்டேன் என விடுதலை பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் நடிப்பதை தவறவிட்டுவிட்டேன் என விடுதலை பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
அசுரன் படத்திற்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் “விடுதலை” படத்தை இயக்கியுள்ளார். சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். முதல்முறையாக வெற்றிமாறன் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ள நிலையில், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் வேடத்தில் நடிக்க,விஜய் சேதுபது போராளியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிலையில், பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக இந்த படத்துக்கும் நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என அனைவரும் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி வார்த்தைக்கு வார்த்தை விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் வெற்றிமாறனை புகழ்ந்து தள்ளினார். தொடர்ந்து பேசிய நடிகர் விஜய்சேதுபதியும் சூரியின் திறமையை பாராட்டினார்.
அவர் பேசுகையில், மேடையில் சூரி அற்புதமாக பேசினார். இந்த மேடையை அவரது பேச்சு எப்படி ஆக்கிரமித்து இருந்ததோ அதேபோல் படத்திலும் சூரியின் நடிப்பு ஆக்கிரமித்து இருக்கும் என நம்புகிறேன். என்னை 8 நாட்கள் தான் விடுதலை படப்பிடிப்பு என்று சொல்லி என்னை ஏமாற்றியவர் வெற்றிமாறன். வட சென்னையில் நடிப்பதை தவறவிட்டுவிட்டேன். அதனால் அப்படத்தை நான் பார்க்கவே இல்லை. 8 நாட்கள் என்னை வைத்து ஒத்திகை பார்த்ததே ரொம்ப லேட்டாகவே தெரிந்தது . வெற்றிமாறன் வேலை செய்வதை எனது குழந்தைகளுக்கு காட்டினேன்.
அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டதை எனது குழந்தைகளும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக. இதே இடத்தில் நடந்த ஆடுகளம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கீழே உட்கார்ந்துகொண்டு இருந்தேன். ஆனால் இப்போது மேடையில் நின்று பேசிக்கொண்டு இருக்கிறேன். ஒரு சின்ன வேண்டுகோள். இளையராஜா பேசும்போது தயவு செய்து கேளுங்கள். அது அறிவிப்பூர்வமாக இருக்கும். அதனால் அவர் பேசும்போது அமைதியாக கேட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என விஜய் சேதுபதி கூறினார்.