Vijay Sethupathi | ‛நடிகையுடன் நெருங்கியதால் விவகாரத்து ஆகும் சூழல் உருவானது’ - உடைத்து பேசிய விஜய் சேதுபதி!
"நான் பார்த்திருக்கிறேன் 25 வயது பையன் கூட அப்படி வேலை செய்யமாட்டான். எல்லா மனிதர்களையும் மதிப்பார், அவங்க சொல்லுறத காது கொடுத்து கேட்பார் “
கோலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகருள் ஒருவர் விஜய் சேதுபதி. இயல்பான தோற்றம் , அலட்டிக்கொள்ளாத நடிப்பு என பாலிவுட் வரையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். கொடுக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தால் என்ன , அதற்கு தன்னால் முடிந்த அளவு நியாயம் செய்ய வேண்டும் என நினைப்பவர் விஜய் சேதுபதி. இந்த நிலையில் விஜய் சேதுபதி அளித்த பேட்டி ஒன்றில் மணிரத்தினம் மற்றும் சிம்புவுடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் “ சிம்பு சாருக்கு என்னங்க கம் பேக்...அந்த வார்த்தையே தப்புனு சொல்லுறேன்..அவர் எப்போதுமே ஸ்ட்ராங்காகத்தான் இருக்கிறார். சிம்புவின் ரசிகர்களை பாருங்கள். அவர் மீது உயிரையே வைத்திருக்கிறார்கள்.. அவர் எங்கையுமே போகல, இங்கதானே இருக்காரு. அப்பறம் என்ன கம் பேக் ... எனக்கு அந்த வார்த்தையை சிம்பு மேல பயன்படுத்துவதில் உடன்பாடில்லை. அவருடன் நான் பணியாற்றியிருக்கிறேன்.
View this post on Instagram
அவருக்கு ஒவ்வொரு டயலாக்கும் எப்படி பேசனும், எப்படி பேசினால் ரசிகர்களை கணெக்ட் செய்யும் என்பது இயல்பாகவே தெரிந்திருக்கிறது. எல்லாமும் ஆழமாக யோசித்துதான் செய்கிறார். சும்மாவெல்லாம் ஒருவர் இந்த இடத்தில் இருக்க முடியாது. சினிமாவில் யாரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். உழைக்கவில்லை என்றால் முன்னேற முடியாது. என்னதான் சினிமா பின்னணி இருந்தாலும் ஒரு சில நேரம் மட்டும்தான் கைக்கொடுக்கும் ..பின்னணி இருந்தாலும் , இல்லாவிட்டாலும் உழைத்தால்தான் முன்னேற முடியும். ஒவ்வொருத்தருக்கும் இக்கட்டான காலக்கட்டம் வரும். அப்போது சொந்தமாக யோசித்துதான் முன்னேற முடியுமே தவிர யாருமே உதவ முடியாது “ என சிம்புவை குறித்து பேசியிருக்கிறார் .
View this post on Instagram
மேலும் மணிரத்தினம் குறித்து பேசுகையில் “ மணிரத்தினம் சாருக்கு வயதுனு ஒன்னு இருக்கான்னு தெரியல. மணி சார் சினிமா என்னும் மிகப்பெரிய கடலுக்குள்ளே இருக்கு அவருக்கான வயது. சினிமாவை மணிரத்தினம் சார் பிடித்து வைத்திருக்கவில்லை. அவரைத்தான் சினிமா பிடித்து வைத்திருக்கிறது. அதன் மீது மணிரத்தினம் சாருக்கு இருக்கும் ஈடுபாடு , பயம் , பக்தியையெல்லாம் அவர் வேலை செய்யும் பொழுதுதான் பார்க்கனும். நான் பார்த்திருக்கிறேன். 25 வயது பையன் கூட அப்படி வேலை செய்யமாட்டான். எல்லா மனிதர்களையும் மதிப்பார், அவங்க சொல்லுறத காது கொடுத்து கேட்பார் “ என பெருமிதமாக கூறியுள்ளார். இன்று சூப்பர் டூப்பராக அசத்தி வரும் விஜய் சேதுபதி , முதல் படத்தில் நாயகியுடன் நெருங்கி நடித்ததால் , அவர் மனைவி மிகப்பெரிய சண்டை போட்டதாகவும் , அந்த வாக்குவாதம் விவாகரத்து வரையில் போனதாக கூறுகிறார். அப்போது சினிமாவை ஒரு போதும் தன்னால் விட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டேன் என்றும் அதன் பிறகு அவளுக்கு சினிமா பழகிவிட்டது என்கிறார் விஜய் சேதுபதி.