மேலும் அறிய

Vijay Sethupathi: மகாராஜா படத்திற்காக விஜய் சேதுபதி செய்த சம்பவம் உண்மையா? கேள்வி எழுப்பும் நெட்டிசன்ஸ்!

மகாராஜா படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒரு ரூபாய் கூட சம்பளமாக பெறவில்லை என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகின்றன. இந்த தகவல் உண்மையா , உருட்டா என நெட்டிசன்க்ஸ் சந்தேகம் தெரிவித்து வருகிறார்கள்.

மகாராஜா

விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கிய இப்படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவானது. இந்தி இயக்குநர் அனுராக் கஷ்யப் இப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்தார். மகாராஜா படத்தின் ப்ரோமோஷன் முதல் டிரைலர் வரை படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்றார்போல் படம் மிக சுவாரஸ்யமான ஒரு திரைக்கதையில் அமைந்திருந்தது. நான் லீனியர் திரைக்கதை , எதிர்பார்க்காத திருப்பம் , பார்வையாளர்கள் படத்துடன் உணர்ச்சிவசமாக தொடர்பு படுத்தி பார்த்துக் கொள்ளும் அப்பா மகள் செண்டிமெண்ட் என ஃபேமிலி ஆடியன்ஸை திருபதி படுத்தியது மகாராஜா. 

திரையரங்கில் 100 கோடிகளுக்கும் மேலாக வசூல் செய்து ஓடிடியில் இப்படம் வெளியானது . ஓடிடியில் வெளியாகி தமிழ் மட்டுமில்லாமல் இந்தி பட ரசிகர்களையும் கவர்ந்தது. இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமத்தை  நடிகர் ஆமிர் கான் பெற்றுள்ளதாகவும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அவரே நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஜா படம் வெளியாகி இரண்டு மாத காலம் முடியும் தருவாயில் இப்படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை

மகாராஜா படம் சுமார் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. கொஞ்சம் பெரிய பட்ஜெட் படம் என்பதால் இப்படத்தின் செலவரை குறைக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி படத்தில் நடித்ததற்கு ஒரு ரூபாய் கூட சம்பளமாக பெறவில்லை என  தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் பற்றிய உண்மைத்தன்மைப் பற்றிய பல கேள்விகள் இணையதளத்தில் எழுப்பப்பட்டு வருகின்றன என்றாலும் சினிமா வட்டாரங்களில் இந்த தகவல் உணமை என்றே பேசி வருகிறார்கள். தற்போது படம் பெரியளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில் படத்தின் லாபத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை அவருக்கு சம்பளமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

முன்னதாக மகாராஜா படத்தின் ப்ரோமோஷனில் பேசிய விஜய் சேதுபதி ஏற்கனவே தான் நடித்த நிறைய படங்களுக்கு இன்னும் சம்பளம் கூட வாங்கியதில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.  

தலைப்பு செய்திகள்

Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Embed widget