Vijay Mother: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா..? தாய் ஷோபா சொன்ன பதில் இதுதான்..!
நடிகர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, இரண்டு நாட்களுக்கு முன்னதாக நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைப்பெற்றது. இதில் வாரிசு படக்குழுவினர் உட்பட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர் விஜய், இந்நிகழ்ச்சியில் மிகவும் எளிய தோற்றத்தில் பங்கேற்ற போட்டோக்களும் இணையத்தில் வைரலானது. முன்னதாக இப்படத்தில் இடம் பெற்றுள்ள தீ தளபதி, ரஞ்சிதமே, சோல் ஆஃப் வாரிசு போன்ற பாடல்கள் வெளியானது. இசை வெளியீட்டிற்கு பிறகு, ஜிமிக்கி பொன்னு, வா தலைவா உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. “ஒரு வேளை ப்ரமோஷனிற்காக விஜய் ஹைதராபாத்திற்கு செல்கிறாரோ?” என கேள்வியெழுப்பி வருகின்றனர்.
வாரிசு படம், பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் ஹைதராபாத் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இசை வெளியீட்டு விழா, அடுத்தடுத்த பாடல் ஆல்பங்கள், படத்தின் எக்கச்சக்க போட்டோக்கள் என வாரிசு படக்குழு ரசிகர்களுக்கு தொடர்ந்த் இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். ஆனால், படத்தின் ரிலீஸ் டேட் குறித்தும், ட்ரெய்லர் மற்றும் டீசரின் அப்டேட் குறித்தும் இன்னும் எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், ரிலீசுக்கு இன்னும் இருவாரங்களே உள்ள நிலையில் வாரிசு படத்தின் ட்ரெய்லர் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது