மேலும் அறிய

GOAT: தியேட்டர்களில் ஆதிக்கம் செலுத்தும் விஜய்யின் கோட்! இன்று மட்டும் இத்தனை ஷோக்களா?

நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் இன்று எந்த மண்டலத்தில் எத்தனை காட்சிகள் ஓடுகிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபவர் விஜய். இவரது கோட் படம் நேற்று வெளியானது.  விநாயகர் சதுர்த்தி விடுமுறை என வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து விடுமுறை என்பதால் கோட் படம் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக முன்பதிவாகியுள்ளது.

இன்று மட்டும் எத்தனை காட்சிகள்?

தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் மண்டல வாரியாக எத்தனை காட்சிகள் இன்று மட்டும் ஓடுகிறது என்பதை கீழே காணலாம்.

  • சென்னை - 1003 காட்சிகள்
  • பெங்களூர் – 1140 காட்சிகள்
  • மதுரை - 208 காட்சிகள்
  • கோவை - 283 காட்சிகள்
  • பாண்டிச்சேரி – 45 காட்சிகள்
  • சேலம் - 104 காட்சிகள்
  • வேலூர் - 79 காட்சிகள்
  • திண்டுக்கல் - 35 காட்சிகள்
  • கொச்சி - 313 காட்சிகள்
  • திருச்சி - 68 காட்சிகள்
  • திருவனந்தபுரம் – 359 காட்சிகள்
  • மும்பை - 177 காட்சிகள்
  • டெல்லி - 74 காட்சிகள்

விறுவிறுப்பாக நடக்கும் முன்பதிவு:

இதில் திருச்சியில் இன்று ஓடும் 4 காட்சிகளும் 100 சதவீத டிக்கெட்டுகள் முன்பதிவாகியுள்ளது. சென்னையில் 99 சதவீத காட்சிகள் முன்பதிவாகியுள்ளது. கோவையில் 96 சதவீதமும், பாண்டிச்சேரியில் 99 சதவீதமும், திண்டுக்கல் 96 சதவீதமும், சேலத்தில் 97 சதவீதமும் டிக்கெட்டுகள் முன்பதிவாகியுள்ளது. இதில் இரவுக்காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்பனையாகிவிட்டது.

தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வரும் கோட் படத்தின் வசூல் இன்று 100 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு காட்சி வரை தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விதமாக கோட் படம் அமைந்திருப்பத ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களிடம் வரவேற்பு:

விஜய் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல நடிகர் மோகன் வில்லனாக நடித்துள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் விஜயகாந்தின் உருவம் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. முதல் நாளான நேற்று மட்டும் கோட் படம் ரூபாய் 43 கோடியை இந்தியா முழுவதும் வசூல் செய்துள்ளது.

ரஜினியின் பாடல், தோனியின் காட்சி, சிவகார்த்திகேயனின் கேமியோ, சூர்யாவின் கங்குவா போஸ்டர், அஜித்தின் மங்காத்தா பிஜிஎம் என ரசிகர்களை ரசிக்க வைக்கும் பல விஷயங்களை வெங்கட்பிரபு படத்தில் இணைத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?
Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?
ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்? அடுத்தது என்ன?
ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்? அடுத்தது என்ன?
Group 4 Vacancies: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை அதிகரியுங்கள்: ட்ரெண்டாகும் கோரிக்கை!
Group 4 Vacancies: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை அதிகரியுங்கள்: ட்ரெண்டாகும் கோரிக்கை!
Breaking News LIVE: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
Breaking News LIVE: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Rowdy kakkathoppu balaji encounter | ரவுடி பாலாஜி ENCOUNTER! சாட்டையை சுழற்றும் அருண்!Vijay on DMK, ADMK | திமுக எதிரி!அதிமுக குறி! விஜய் மாஸ்டர் ப்ளான்! பெரியார் அரசியல்!Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?
Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?
ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்? அடுத்தது என்ன?
ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்? அடுத்தது என்ன?
Group 4 Vacancies: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை அதிகரியுங்கள்: ட்ரெண்டாகும் கோரிக்கை!
Group 4 Vacancies: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை அதிகரியுங்கள்: ட்ரெண்டாகும் கோரிக்கை!
Breaking News LIVE: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
Breaking News LIVE: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
Tupperware Bankruptcy: பேரதிர்ச்சி!  கொடிகட்டிப் பறந்த டப்பர்வேர் நிறுவனம்.. விரைவில் திவால்? தலைக்கு மேலே போன கடன்
பேரதிர்ச்சி! கொடிகட்டிப் பறந்த டப்பர்வேர் நிறுவனம்.. விரைவில் திவால்? தலைக்கு மேலே போன கடன்
தகவல் மட்டுமே...இன்னும் வராத உத்தரவு- தயார் நிலையில் கோப்புகள்; துணை முதல்வராகும் உதயநிதி!
தகவல் மட்டுமே...இன்னும் வராத உத்தரவு- தயார் நிலையில் கோப்புகள்; துணை முதல்வராகும் உதயநிதி!
காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டருக்கு சம்போ செந்திலே காரணம் - தாயார் ஆவேச பேட்டி
காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டருக்கு சம்போ செந்திலே காரணம் - தாயார் ஆவேச பேட்டி
Neelakurinji: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் நீலக்குறிஞ்சி : நீலகிரியில் பூத்துக்குலுங்கும் மலர்கள்..
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் நீலக்குறிஞ்சி : நீலகிரியில் பூத்துக்குலுங்கும் மலர்கள்..
Embed widget