Ma Po Si: விமல் நடித்து போஸ் வெங்கட் இயக்கிய மா.பொ.சி டைட்டில் மாற்றம்.. புது டைட்டில் என்ன தெரியுமா?
Ma Po Si Title Change: நடிகர் விமல் நடித்து போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள மா.பொ.சி படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது
மா.பொ.சி
விமல் நடித்து போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மா.பொ.சி. வெற்றிமாறன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். சித்துகுமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த சில மாதங்கள் முன்பாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது . வாகை சூட வா படத்தைப் போல் இப்படமும் கல்வியை மையப்படுத்திய கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மா.பொ.சி என்றால் மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என விரிவாக்கம் குறிப்பிடப்பட்டது. இப்படியான நிலையில் தமிழறிஞர் ம.பொ சிவஞானம் பெயரை படத்தின் டைட்டிலாக வைத்தது ம.பொ.சியின் பேத்தி கண்டனம் தெரிவித்தார். தனது சமூக வலைதளத்தில் அவர் “நாடறிந்த ஒரு வீரரை , சிலம்புச் செல்வரை , எல்லை போராட்ட வீரரின் பெயரை பயன்படுத்திக் கொண்டு படம் அவரைப் பற்றியது இல்லை என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று அவர் கடுமையாக படக்குழுவை விமர்சித்திருந்தார்.
மா.பொ.சி டைட்டில் மாற்றம்
இதனைத் தொடர்ந்து தற்போது மா.பொ. சி படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி மா.பொ.சி என்கிற டைட்டில் மாற்றப்பட்டு ‘சார்’ என்று படத்திற்கு புது டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படக்குழு சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை கீழ்வருமாறு :
”பத்திரிகை, ஊடகத்துறை நண்பர்களுக்கு வணக்கம். எங்களது SSS PICTURES நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான Grass Root Film Company வழங்கும், இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவான, "மா.பொ.சி." திரைப்படதிற்கு, சில தவிர்க்க முடியாத காரணங்களால், "சார்" என்ற புதிய தலைப்பினை சூட்டியுள்ளோம். அன்பு பத்திரிகை, ஊடகத்துறை நண்பர்கள், உங்கள் ஆதரவினை தொடர்ந்து வழங்க கேட்டுக்கொள்கிறோம். படத்தின் புதிய தலைப்புடன் கூடிய போஸ்டர், டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
போஸ் வெங்கட் வீடியோ
மா. பொ. சி தலைப்பு மாற்றப்பட்டது… தற்போது “சார்”(sir).. 🧡🧡🧡 pic.twitter.com/DMgYJSsmjT
— Bose Venkat (@DirectorBose) June 14, 2024
நன்றி” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போஸ் வெங்கட் இதுதொடர்பாக வீடியோவினையும் பகிர்ந்துள்ளார். ஒரு சில காரணங்களால் படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாகவும், ஆனால் இந்த டைட்டிலுக்கு நிகராக அழகான சார் என்கிற டைட்டில் தங்கள் படத்திற்கு வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.