Udhayanidhi Stalin: 'நான் அப்பா வீட்டுக்கு போறது இல்ல.. இதுதான் காரணம்’ : வெளிப்படையாக பதில் சொன்ன உதயநிதி..
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் என பலரும் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படமானது இன்று தியேட்டரில் வெளியாகிறது.
வீட்டில் தன்னை விட மனைவி கிருத்திகாதான் ஆளுமைமிக்க நபர் என நேர்காணல் ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் என பலரும் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படமானது இன்று தியேட்டரில் வெளியாகிறது. முன்னதாக மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் திரையுலகில் ஏராளமான நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து ஜூன் 16 ஆம் தேதி மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்த படம் நடிகர் உதயநிதியின் கடைசிப்படம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், படத்தின் அறிவிப்பு வெளியானபோதே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படக்குழுவினர் பல நேர்காணல்களில் பங்கேற்றுள்ளனர். அதில் ஒரு நேர்காணலில் உதயநிதி, தான் ஏன் தனது அப்பா வீட்டுக்கு சென்று தங்குவதில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அதில், உங்களைப் போலவே மனைவி கிருத்திகாவும் மீடியா, சினிமாவுல இருக்காங்க. உங்கள் இருவரில் யார் பவர் ஃபுல்லான நபர் என்ற கேள்வி உதயநிதியிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு, ”வீட்டுல என்னை விட கிருத்திகா தான் ரொம்ப பவர் ஃபுல்.. ஏன்னா நான் வீட்டுக்கே போறது இல்ல” என நகைச்சுவையாக உதயநிதி தெரிவித்தார்.
அப்போது ஒரு நேர்காணலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”உதயநிதி என் வீட்டுக்கு வருவதில்லை” என்கிற ரீதியில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்திருந்தார். அதனை குறிப்பிட்டு சொல்லப்பட்டது. அதற்கு, “நான் முழுக்க முழுக்க பயணத்துலதான் இருக்கேன். வாரத்துக்கு 3 நாள் வேற மாவட்டத்துல கட்சி நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சி, இளைஞரணி நிகழ்ச்சின்னு கலந்துகிட்டு இருப்பேன். இப்போது மாமன்னன் ரிலீசுக்காக சென்னை வந்துருக்கேன். முன்னாடில்லாம் அப்பா வீட்டுல தங்கிட்டு இருந்தேன். இப்ப அமைச்சர் ஆனதுக்கு அப்புறம் என்னை பார்ப்பதற்கு நிறைய பேர் வருவார்கள். ஒரு புரோட்டோகால் இருக்குது.
முதலமைச்சர் ஆன பிறகு அப்பாவை பார்க்க நிறைய வெளிநாட்டு பிரதிநிதிகள், முக்கியமானவங்க எல்லோரும் வருவாங்க. அதனால் அப்பாவுக்கு தொந்தரவு தரக்கூடாது என கேம்ப் ஆஃபீஸ்ல தங்கியிருக்கேன்.என்னோட வீடு ஈசிஆர்ல இருக்குது. இப்ப சென்னை நகருக்குள் இருக்கேன். சென்னையில் இருந்தேன் என்றால் வாரத்துல 3 நாட்கள் வீட்டுக்கு போவேன்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.