மேலும் அறிய

Thalapathy 69: விஜய்யின் கடைசி படம்! இன்று தொடங்குகிறது தளபதி 69 படப்பிடிப்பு - ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள அவரது கடைசி படமான தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அரசியல் பயணத்தை தொடங்கிய போதே திரைப்படங்களில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார். மேலும். ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டு படங்களில் மட்டும் நடிப்பதாக அறிவித்திருந்தார்.

இன்று தொடங்கும் தளபதி 69 படப்பிடிப்பு:

விஜய் அறிவித்தபடி அவரது கடைசி படத்திற்கு முந்தைய படமான கோட் படம் கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியானது. இதையடுத்து, நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படமான தளபதி 69 படத்தின் பிரம்மாண்ட பூஜை நேற்று நடைபெற்றது.

படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில், தளபதி 69 படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. சதுரங்க வேட்டை, தீரன், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். பொதுவாக விஜய் படங்கள் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அவர் நடிக்கும் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எச்.வினோத் இந்த படத்தை இயக்குவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.

நட்சத்திர கூட்டணி:

இந்த படத்தில் வில்லனாக பாலிவுட்டின் பிரபல நடிகரான பாபி தியோல் நடிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், பிரியாமணி, நரேன், மமைதாபைஜூ ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கன்னட திரையுலகின் மிகப்பெரிய திரைப்பட விநியோக நிறுவனமான கே.வி.என். ப்ரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் மூலமாக அவர்கள் முதன்முறையாக தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமாகின்றனர். கமல்ஹாசன் - இயக்குனர் எச்.வினோத் கூட்டணியில் உருவாக இருந்த படம் கைவிடப்பட்ட நிலையில், அதே கதையை நடிகர் விஜய்யை வைத்து இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ளார்.

விஜய்யின் கடைசி படம்:

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வரும் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளில் த.வெ.க.வினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாநாட்டிற்கான பூமி பூஜை ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. தளபதி 69 படத்திற்கான பூஜையும் நேற்று நடைபெற்றது ரசிகர்கள் மத்தியில் மேலும் மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது.

எச்.வினோத்தின் ஒவ்வொரு படத்திலும் சமூகத்தில் மக்கள் சந்திக்கும் அன்றாட சிக்கல்களை வித்தியாசமான கோணத்தில் அணுகியிருப்பார். விஜய் அரசியலில் குதித்துள்ள சூழலிலும், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையிலும் இந்த படம் ஒரு சமூக கருத்துள்ள வித்தியாசமான படமாக இருக்கும் என்று விஜய்யின் ரசிகர்கள் ஆர்வத்துடன் நம்புகின்றனர். அதேசமயம், இந்த படம் குடும்பங்களுடன் பார்க்கும் படமாக அமையும் என்று ஏற்கனவே எச்.வினோத் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Embed widget