மேலும் அறிய

Suriya: ஆதர்ச இயக்குநர் கே.வி.ஆனந்த் குடும்பத்தை சந்தித்த சூர்யா: சிவக்குமார் தந்த அன்புப் பரிசு!

Suriya: சூர்யா - கேவி ஆனந்த் கூட்டணியில் அயன், மாற்றான், காப்பான் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.

Surya: அயன் படத்தின் மூலம் தனக்கு கம்பேக் கொடுத்த இயக்குநர் கே.வி. ஆனந்த் குடும்பத்தினரை, நடிகர் சூர்யா தனது அப்பாவுடன் சென்று சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்க இருக்கும் படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார். தொடக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வந்த படங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை என்றாலும், 2009ம் ஆண்டு வெளிவந்த அயன் படம் சூர்யாவுக்கு கம்பேக் கொடுத்தது. 
 
நகை, வைரம் கடத்தல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அயன் படம், சூர்யாவுக்கு முக்கியமான திருப்புமுனையாகவும் அமைந்தது. இந்தப் படத்தை இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கி இருப்பார். படத்தில் சூர்யாவுடன் இணைந்து தமன்னா, பிரபு, ஜெகன், கருணாஸ் என பலர் நடித்திருப்பார்கள். கதை, காதல், ஆக்‌ஷன், காமெடி, பாடல் என அனைத்திலும் ஸ்கோர் செய்த அயன் படம் வசூலில் வெற்றிப்பெற்றது. 
 
அயன் படத்தின் வெற்றியால் ராசியான சூர்யா - கேவி ஆனந்த் காம்போ, அடுத்தடுத்த படங்களிலும் இணைந்தது. இருவரின் கூட்டணியிலும் மாற்றான், காப்பான் படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இதனால், கே.வி.ஆனந்த் மற்றும் சூர்யா இடையே நட்பும் அதிகரித்து இருந்தது. இந்தச் சூழலில் தான் 2021ம் ஆண்டு கொரோனா பாதிப்பால் கே.வி.ஆனந்த் உயிரிழந்தார். இந்த நிலையில் கே.வி.ஆனந்த் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சூர்யா தனது அப்பா சிவக்குமாருடன் கே.வி.ஆனந்த் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்துள்ளார். 
 
கேவி ஆனந்தின் மகளுக்கு திருமண வாழ்த்து கூறிய சூர்யா, தனது அப்பாவுடன் இணைந்து குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து கொண்டார். நடிகர் சிவக்குமார், தான் காந்தி பற்றி எழுதிய சித்திரச் சோலை என்ற நூலை கே.வி.ஆனந்தின் மகளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். மறைந்த இயக்குநரின் குடும்பத்தினரை சூர்யா நேரில் சென்று சந்தித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
1994ம் ஆண்டு மலையாளத்தின் வெளிவந்த ‘தென்மாவின் கொம்பத்’ என்ற படத்தின் மூலம் திரைக்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் கே.வி.ஆனந்த். முதல் படத்திலேயே சிறப்பான ஒளிப்பதிவு செய்ததற்காக தேசிய விருது பெற்ற இவர், கனா கண்டேன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர், சூர்யா நடித்த அயன், ஜீவா நடித்த கோ, தனுஷ் நடித்த அனேகன், விஜய் சேதுபதி நடித்த கவன், சூர்யா நடித்த காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget