Kanguva : 4 மொழியில் ஆடியோ லாஞ்சு நடத்த திட்டம்... வேற லெவலில் கங்குவா பட ப்ரோமோஷன்
சூர்யா நடித்துள்ள கங்குவா படத்திற்கு நான்கு மொழியில் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பாபி தியோல் , திஷா பதானி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். வெற்றி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப் பட்ட இப்படம் 17 மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற்று இந்த ஆண்டு ஜனவரியில் முடிவுக்கு வந்தது. 300 முதல் 350 கோடி ரூபாய் செலவில் இப்படம் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன ஜூலை 23 நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் வெளியாக இருக்கிறது.
Hear from team #Kanguva as they expound #FireSong in one word 🔥
Releasing Tomorrow 🌋 #KanguvaFromOct10 🦅@Suriya_offl @DishPatani @thedeol @directorsiva @ThisIsDSP #StudioGreen @GnanavelrajaKe @vetrivisuals @supremesundar @UV_Creations @KvnProductions @PenMovies… pic.twitter.com/V60dThzOnr— Studio Green (@StudioGreen2) July 22, 2024
நான்கு மொழியில் ஆடியோ லாஞ்சு
சரித்திர கதையாக உருவாகி இருக்கும் கங்குவா படம் தமிழ், தெலுங்கு , இந்தி , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் சூர்யா இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படம் பான் இந்திய வெற்றிபெறும் என்று படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. கங்குவா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நான்கு மொழியில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த நிகழ்ச்சிகளில் பிரபல நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. சூர்யாவின் கரியரில் கங்குவா படம் குறிப்பிடத் தகுந்த படமாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
#Kanguva Will Have 4 Audio Lunch Event With Respected Big Celebrities From All Industries #Tamil , #Telugu , #Malayalam & #Hindi 😳🔥 pic.twitter.com/531Qfr9WrU
— Bharadwaj Rangan (@Bharadwaj_offl) July 21, 2024
சூர்யா 44
நாளை சூர்யா பிறந்தநாளன்று சூர்யா தற்போது நடித்து வரும் சூர்யா 44 படத்தின் டைட்டிலும் வெளியிடப் படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இப்படத்தில் ஜோஜூ ஜார்ஜ் , ஜெயராம் , பூஜா ஹெக்டே , கருணாகரன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

