Watch Video | கேரளாவில் சூர்யா.! அன்பால் கூடிய உள்ளூர் மக்கள்! வார்த்தைகளால் நெகிழ வைத்த ஹீரோ!
வாடிவாசல் படத்துக்காக தற்காப்பு கலையான களரிபயட்டுவை சூர்யா கற்று வருவதாகவும், அதற்காக அவர் கேரளா சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது
![Watch Video | கேரளாவில் சூர்யா.! அன்பால் கூடிய உள்ளூர் மக்கள்! வார்த்தைகளால் நெகிழ வைத்த ஹீரோ! Actor Suriya, Jyotika chat with locals as they enjoy beach vacation in Kerala Watch Video | கேரளாவில் சூர்யா.! அன்பால் கூடிய உள்ளூர் மக்கள்! வார்த்தைகளால் நெகிழ வைத்த ஹீரோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/15/79991a95a6c6b66448cfe68a5f9212f4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் சூர்யாவுக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளா, ஆந்திராவிலும் ரசிகர்கள் அதிகம். சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சூர்யா தற்போது வெற்றிமாறன் படத்துக்காக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. வாடிவாசல் படத்துக்காக தற்காப்பு கலையான களரிபயட்டுவை சூர்யா கற்று வருவதாகவும், அதற்காக அவர் கேரளா சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கேரளா பயணத்தை ஒரு ட்ரிப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக சூர்யாவுடன் அவரது மனைவி ஜோதிகாவும் கேரளாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கேரளாவில் உள்ள உள்ளூர் மக்களிடையே சூர்யா அன்பாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காரில் அமர்ந்திருக்கும் சூர்யாவை மிகவும் ஆர்வமுடன் கேரளாவின் உள்ளூர் மக்கள் சென்று பார்க்கின்றனர். காரினை நிறுத்திய சூர்யா அவர்களிடம் அன்பாக பேசுகிறார்.ஜோதிகா குறித்தும் அக்கிராம மக்கள் கேள்வி எழுப்ப, அக்கா.. இருக்காங்க.. இன்னும் ஒருவாரம் இருப்பாங்க என்கிறார் சூர்யா. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மீதான சூர்யாவின் அன்பை பலரும் பாராட்டு ஷேர் செய்து வருகின்றனர்
• Annan @Suriya_offl in Kerala ... Love towards this man is 😘 #EtharkkumThunindhavan@rajsekarpandian pic.twitter.com/fI7VWoYpTX
— Kerala Suriya Fans - KSF ™ (@KSF_Offl) December 12, 2021
இதற்கிடையே, பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெற்றிருக்கும் வாடா தம்பி என்ற பாடல் இன்று வெளியாகினது. டி. இமான் இசையில் ஜி.வி. பிரகாஷும், அனிருத்தும் பாடியிருக்கின்றனர். இயக்குநர் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். தற்போது இந்தப் பாடல் வைரலாகிவருகிறது.
#ETFirstSingle #VaadaThambi lyric video is here:
— Sun Pictures (@sunpictures) December 15, 2021
▶ https://t.co/o7L3QBNvaH
An @immancomposer musical
🎙@gvprakash & @anirudhofficial
🖊@VigneshShivN@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @RathnaveluDop @priyankaamohan @sooriofficial @AntonyLRuben #EtharkkumThunindhavan #ET
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)