Actor Soori: "சூப்பரான படம்... தரமான படம்” .. டாடா படம் பார்த்து கண்கலங்கிய சூரி..!
நடிகர் கவின் நடித்துள்ள டாடா படம் பார்த்த நடிகர் சூரி நெகிழ்ச்சியாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் கவின் நடித்துள்ள டாடா படம் பார்த்த நடிகர் சூரி நெகிழ்ச்சியாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “டாடா தி அப்பா”. இந்த படம் கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகும் அபர்ணா தாஸ், கவின் இருவரும் பெற்றோரைப் பிரிந்து தனியாக வாழ்கின்றனர்.
மேலும் படிக்க: Dada Movie Review: கவினுக்கு லிஃப்ட் மேலேயா? கீழேயா? - எப்படியிருக்கு டாடா படம்? முழு விமர்சனம் இதோ!
வறுமை, மன அழுத்தம் போன்றவை இருவருக்குள்ளும் பிரிவை உண்டாக்குகிறது. ஒருகட்டத்தில் குழந்தை, கவினை பிரிந்து அபர்ணா தாஸ் செல்ல, குழந்தையை வளர்க்கும் பொறுப்பு கவினிடம் சேர்கிறது. கவினும் அபர்ணாவும் சேர்ந்தார்களா? குழந்தையின் நிலைமை என்ன ஆனது? என்பதே இப்படத்தின் கதையாகும்.
ட்ரெய்லரே அனைவரையும் கவர்ந்த நிலையில் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் கவின், அபர்ணா தாஸ் நடிப்பை பாராட்டி சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் நாளுக்கு நாள் டாடா திரையிடப்படும் திரையரங்குகள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதனால் டாடா பழக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
#Kavin's #Dada - #Soori tears up.. 🥹♥️pic.twitter.com/Iwn7HdN909
— VCD (@VCDtweets) February 13, 2023
இந்நிலையில் நடிகர் சூரி டாடா படம் பார்த்து விட்டு அதுபற்றி கருத்து தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், “ரொம்ப நிறைவான ஒரு படமா இருந்துச்சு. டாடா படம் சிறப்பா இருந்துச்சு.. அற்புதமான படம். நிறைய இடத்துல கண்ணுல தண்ணி வரை அளவுக்கு சிரிக்கவும் வச்சாங்க, அழவும் வச்சாங்க. சூப்பர் படம்..தரமான படம். டாடா படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் வாழ்த்துகள்.குடும்பத்துடன் படம் பார்க்கலாம்" என சூரி தெரிவித்துள்ளார்.