மேலும் அறிய

Soori: ரஜினி ஆகலாம் என நினைத்த சூரியை சாக்கடை அள்ள விட்ட கொடூரம் - ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை வந்ததும் நான் செய்யாத வேலைகளே இல்லை. சினிமாவுக்கு வந்தவுடன் லாரி கிளீனர் வேலை என கூப்பிட்டார்கள் என சென்றேன்.

சென்னையில் நான் பார்க்காத வேலையே இல்லை என நடிகர் சூரி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் வெற்றிமாறன் கதையில், துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் சூரி முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் “கருடன்”. இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரகனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி என பலரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள கருடன் படம் மே 31 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படம் தொடர்பான ப்ரோமோஷன் பணிகளில் சூரி பங்கேற்று வருகிறார். 

அதில் ஒரு நேர்காணலில் பேசிய சூரி, “மதுரையில் மாதம் ரூ.900 சம்பளம் வாங்கி கொண்டிருந்தேன். எப்படியாவது சென்னை வந்து மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்கி விட நினைத்தேன். என்னுடைய நண்பர் சினிமாவில் ஒருநாளைக்கு சாப்பாடு எல்லாம் போட்டு ரூ.500 சம்பளம் என சொன்னார்கள். கணக்கு எல்லாம் போட்டு சரி என வந்தேன். சென்னை வந்ததும் நான் செய்யாத வேலைகளே இல்லை. சினிமாவுக்கு வந்தவுடன் லாரி கிளீனர் வேலை என கூப்பிட்டார்கள் என சென்றேன். என் நண்பர் என்னிடம் ரஜினியே சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் கண்டக்டராக தான் இருந்தார். அந்த மாதிரி நினைத்துக்கொள் என சொன்னான்.

நானும் அப்படியே நினைத்து சென்று பார்த்தால், முதல் நாள் இடிந்த கட்டட கழிவுகளை அள்ளினார்கள். பின்னர் எங்கெல்லாம் போன் வருகிறதோ அங்கு டிப்பர் லாரியுடன் செல்வேன். அப்படி ஒருநாள் அடையாறு கூவம் ஆற்றில் இறக்கி விட்டார்கள். லாரி நிற்கும் நிலையில் கொக்கி போட்டு தானே கழிவை அள்ளுவார்கள் என நினைத்தேன். நெஞ்சு வரை சாக்கடை சென்று கொண்டிருக்கிறது. வேறு வழியே இல்லை என்ற நிலையில் என்னை கூட்டிச் சென்ற அண்ணனிடம் என்னன்னே சாக்கடையில் இறக்கி விடுறீங்க என கேட்டேன். நேற்று எல்லாம் நான் முகம் வரை இருக்கும் சாக்கடையில் இறங்கினேன் என சொன்னார். அந்த வேலை பார்த்தேன். 

அதன்பின்னர் சென்னையில் எல்லா இடங்களிலும் பெயிண்டிங் வேலை பார்த்திருக்கேன். சென்னையில்  பெரிய பெரிய கடைகளுக்கு பெயிண்ட் அடித்திருக்கிறேன். போஸ்டர் ஒட்டியிருக்கிறேன். இன்றைக்கு என் படத்துக்கு போஸ்டர் ஒட்டுவதை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல் சுவரில் கட்சி விளம்பரத்துக்கு பெயிண்ட் அடிப்பேன். ஆட்டோ ஓட்டியிருக்கேன். கல்யாண வீடுகளில் டெக்கரேஷன் வேலை செய்திருக்கேன்” என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
Gatta Kusthi 2 Trailer : ஹோம் மேக்கராக விஷ்ணு விஷால்...அசத்தும் கட்டா குஸ்தி 2 ஆம் பாகத்தின் டிரெய்லர்
Gatta Kusthi 2 Trailer : ஹோம் மேக்கராக விஷ்ணு விஷால்...அசத்தும் கட்டா குஸ்தி 2 ஆம் பாகத்தின் டிரெய்லர்
மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி...நிவின் பாலி அல்ஃபோன்ஸ் புத்திரன் புதிய பட அறிவிப்பு
மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி...நிவின் பாலி அல்ஃபோன்ஸ் புத்திரன் புதிய பட அறிவிப்பு
கவின் நயன்தாராவுடன் கடைசியாக நடித்த பாக்யராஜ்..ஹாய் படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
கவின் நயன்தாராவுடன் கடைசியாக நடித்த பாக்யராஜ்..ஹாய் படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
M.R. Vijayabhaskar resigned : எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர் விஜயபாஸ்கர்.! தட்டி தூக்கிய விஜய்- ஷாக்காகி நிற்கும் இபிஎஸ்
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர் விஜயபாஸ்கர்.! தட்டி தூக்கிய விஜய்- ஷாக்காகி நிற்கும் இபிஎஸ்
CM Vijay IAS and IPS Conference : தொடங்கியது IAS, IPS அதிகாரிகள் மாநாடு.! செம பிளானோடு களமிறங்கிய சிஎம் விஜய்
தொடங்கியது IAS, IPS அதிகாரிகள் மாநாடு.! செம பிளானோடு களமிறங்கிய சிஎம் விஜய்
Domestic Violence: ”அது என் புள்ள தானா? DNA டெஸ்ட் எடுக்கணும்” 5 மாத கரு, 23 வயது இளம்பெண் தற்கொலை
”அது என் புள்ள தானா? DNA டெஸ்ட் எடுக்கணும்” 5 மாத கரு, 23 வயது இளம்பெண் தற்கொலை
MK Stalin: மாற்றி மாற்றி பேசி புலம்பும் EX CM ஸ்டாலின்..! ஆற்றாமையா? உ.பிக்களுக்கான ஊக்கமா? தவெக அரசு
மாற்றி மாற்றி பேசி புலம்பும் EX CM ஸ்டாலின்..! ஆற்றாமையா? உ.பிக்களுக்கான ஊக்கமா? தவெக அரசு
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Recreation Club fees hike : கிளப் மதுக்கூட கட்டணம் அதிரடியாக உயர்ந்தது.! 15 லட்சம் டூ 30 லட்சமாக அதிகரிப்பு- வெளியானது அரசிதழ்
கிளப் மதுக்கூட கட்டணம் அதிரடியாக உயர்ந்தது.! 15 லட்சம் டூ 30 லட்சமாக அதிகரிப்பு- வெளியானது அரசிதழ்
BT Arasakumar : 100 கோடி மோசடி... சிக்கிய அரசகுமார்.! பள்ளி நிர்வாகத்திற்கு போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
100 கோடி மோசடி... சிக்கிய அரசகுமார்.! பள்ளி நிர்வாகத்திற்கு போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
DMK PROTEST : விஜய் அரசுக்கு எதிராக திமுகவின் முதல் போராட்டத்திற்கு செக்.! தடை விதித்த போலீஸ்- காரணம் என்ன.?
விஜய் அரசுக்கு எதிராக திமுகவின் முதல் போராட்டத்திற்கு செக்.! தடை விதித்த போலீஸ்- காரணம் என்ன.?
Embed widget