மேலும் அறிய

Gatta Kusthi 2 Trailer : ஹோம் மேக்கராக விஷ்ணு விஷால்...அசத்தும் கட்டா குஸ்தி 2 ஆம் பாகத்தின் டிரெய்லர்

விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்துள்ள கட்டா குஸ்தி 2 ஆம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள இந்த இரண்டாம் பாகம், காமெடி , ஆக்‌ஷன் இணைத்து மேலும் விறுவிறுப்பான கதையாக உருவாகியுள்ளது. இயக்குநர் செல்லா அய்யாவு மீண்டும் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மியுடன் கருணாஸ், காளி வெங்கட், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை சீன் ரோல்டன் அமைத்துள்ளார்.

கட்டா குஸ்தி 2 டிரெய்லர் 

தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரில், முதல் பாகத்தின் முடிவில் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கிய வீரா மற்றும் கீர்த்தி, தற்போது குழந்தையுடன் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டிருப்பது காட்டப்படுகிறது. அதே நேரத்தில் தேசிய அளவிலான மல்யுத்த வீராங்கனையாக உயர வேண்டும் என்ற கீர்த்தியின் கனவு இன்னும் தொடர்கிறது. அந்த கனவை நனவாக்குவதற்காக வீட்டுப் பொறுப்புகளை விஷ்ணு விஷாலின் கதாபாத்திரம் ஏற்றுக்கொள்வதும், பின்னர் எதிர்பாராத சூழ்நிலையால் அவரும் மல்யுத்த உலகிற்குள் களமிறங்குவதும் டிரெய்லரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படம் ஃபேமிலி ஆடியன்ஸிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது.  ஆணாதிக்க மனப்பான்மையுடன் இருக்கும் இளைஞன், திறமையான மல்யுத்த வீராங்கனையைத் திருமணம் செய்து கொண்ட பிறகு அவருக்குள் ஏற்படும் மாற்றங்களையும், பெண்களின் கனவுகளுக்கு குடும்ப ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதையும் நகைச்சுவையுடன் படம் எடுத்துக் காட்டியது. விமர்சகர்களிடமும் பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற அந்தப் படம் வசூலிலும் வெற்றி பெற்று, விஷ்ணு விஷாலின் முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது.

அந்த வெற்றியின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' முதல் பாகத்தின் கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. முதல் பாகத்தைப் போல இரண்டாவது பாகமும் அதே அளவு வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கலாம் 

Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay: சாரி.. என்னால லீவு எல்லாம் போட முடியாது.. குஷ்புவிடம் வெளிப்படையாக கூறிய விஜய்!
CM Vijay: சாரி.. என்னால லீவு எல்லாம் போட முடியாது.. குஷ்புவிடம் வெளிப்படையாக கூறிய விஜய்!
Ravi Mohan: ரவிமோகனிடம் ரூ.40 லட்சம் கேட்டோம்.. ஆனால் மாத பராமரிப்புக்கு இல்ல.. ஆர்த்தி அம்மா கண்ணீர் பேட்டி
Ravi Mohan: ரவிமோகனிடம் ரூ.40 லட்சம் கேட்டோம்.. ஆனால் மாத பராமரிப்புக்கு இல்ல.. ஆர்த்தி அம்மா கண்ணீர் பேட்டி
"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Embed widget