மேலும் அறிய

DMK PROTEST : விஜய் அரசுக்கு எதிராக திமுகவின் முதல் போராட்டத்திற்கு செக்.! தடை விதித்த போலீஸ்- காரணம் என்ன.?

DMK PROTEST Police deny permission : அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக திமுக குற்றம்சாட்டி வரும் நிலையில், இன்று திமுக மாணவர் அணி சார்பாக நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சர் சரத்குமாரை பதவியில் இருந்து நீக்குங்க

தமிழகத்தில் தவெக அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும், பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் எதிர்கட்சிகள் சார்பாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் மின் வெட்டு, விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தவெக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில், கடந்த வாரம் தவெக அரசுக்கு எதிராக அதிமுக சார்பாக முதல் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் அமைச்சர் சரத் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த்து.

போதைப்பொருள் பயன்படுத்தினாரா அமைச்சர்.?

அந்த வகையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக ஐபிஎல் போட்டியின் போது தனது மனைவியோடு கிரிக்கெட் மேட்ச் பார்க்க சென்ற அமைச்சர் சரத் போதைப்பொருள் பயன்படுத்தியாக புகார் எழுந்தது. இதற்கு அமைச்சர் தனது குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், மாத்திரையை சாப்பிட முடியாததால் மாத்திரையை நொறுக்கி கொடுக்கப்பட்ட வீடியோ என விளக்கம் அளித்திருந்தார். ஆனால் இதனை சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் தவெக அரசுக்கு எதிராக திமுகவின் போராட்டம்  நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று காலை திமுக சார்பாக போராட்டம் நடந்த திமுக திட்டமிட்ட நிலையில், போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். 

திமுக போராட்டம் அறிவிப்பு

சென்னையில் ராஜரத்தினம் அரங்கம் அருகே திமுகவினர் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், அதனை போலீசார் அகற்றினர். மேலும் அங்கு கூடியிருந்த திமுகவினரை கலைந்து செல்லுமாறும் போலீசார் கேட்டுக்கொண்டனர். இதனால் திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஏராளமான திமுகவினரும் கூடி வருவதால் பதற்றமான நிலை நீடித்து வருகிறது. இதே போல தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் திமுகவின் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது இதனையடுத்து போராட்டத்தில் பங்கேற்க வந்த திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

திமுகவினர் கைது

திமுக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் கூறுகையில், திமுக சார்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஒருநாள் முன்னதாக அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை பெருநகர காவல் சட்டம் 41-ன் படி அந்த மனுவை பரிசீலிக்க 5 முழு வேலை நாள் அவகாசம் தேவை. எனவே உரிய கால அவகாசம் இல்லாததால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுகவிற்கு காவல் துறை சார்பாக அனுமதி மறுப்பு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
CM Vijay: முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget