காளையுடன் ஜல்லிகட்டுக்கு தயாரான சூரி..இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ
பொங்கல் ஜல்லிகட்டு போட்டியில் கருப்பன் என்கிற தனது காளையுடன் போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார் நடிகர் சூரி

ஜல்லிகட்டு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16ஆம் தேதி உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான பதிவு madurai.nic.in இணையதளம் மூலம் பதிவு நிறைவுபெற்றது. இதில் மதுரை அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகளுக்கும் 5,347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 5 ஆயிரத்து 786 காளை உரிமையாளர்களும், 1698 மாடுபிடி வீரர்களும், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 4820 காளை உரிமையாளர்களும், 1914 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் முன்பதிவும் செய்துள்ளனர். அதே போல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 2026 காளை உரிமையாளர்களும் 1735 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் பதிவு செய்துள்ளனர் செய்துள்ளனர்.
காளையுடன் தயாரான சூரி
திரைத்துறை பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் என பலர் இந்த ஜல்லிகட்டு போட்டியில் தங்கள் மாடுகளுடன் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் நடிகர் சூரி தனது காளை மாடுன் ஜல்லிகட்டு போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார் . தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பன் என்கிற தனது காளையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். " பொங்கலுக்கு களத்தில் இறங்க தயாராக நிற்கிறான் கருப்பன்" என இந்த வீடியோவில் அவர் கேப்ஷன் பதிவிட்டுள்ளார்
பொங்கலுக்கு களத்தில் இறங்க தயாராகி நிற்கிறான் - ராஜாக்கூர் கருப்பன் #jallikattu2025🌾💪 pic.twitter.com/T6dxcEJrbJ
— Actor Soori (@sooriofficial) January 11, 2025
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















