மேலும் அறிய

Sivakarthikeyan: ரூ. 4 கோடி சம்பள் பாக்கி: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது வழக்கு தொடர்ந்த சிவகார்த்திகேயன் !

நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் 2018ஆம் ஆண்டு மிஸ்டர் லோகல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளத்தை முழுமையாக அளிக்கவில்லை என்ற புகார் எழுந்தது. 

இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சம்பள பாக்கி ரூ. 4 கோடியை தர உத்தரவிட வேண்டும் என சிவகார்த்திகேயன் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்துள்ளார். மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்ததிற்காக பேசப்பட்ட ரூ. 15 கோடி சம்பளத்தில் ரூ. 11 கோடி மட்டுமே ஞானவேல்ராஜா வழங்கியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் மிஸ்டர் லோக்கல். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் மே 2019ல் வெளியானது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடித்ததற்கான சம்பள பாக்கியை இன்னும் தரவில்லை என்று கூறி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் அளித்துள்ள மனுவில், மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் நடிப்பதற்காக கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக 15 கோடி ரூபாய் சம்பளத்தை பல்வேறு தவணைகளில் தரவேண்டும் என்று பேசியதாகவும் கூறப்பட்டுள்ளது.

மிஸ்டர் லோக்கல் படம் 2019 மே 17 அன்று வெளியாகிவிட்ட போதிலும் படத்தின் தயாரிப்பாளர் 11 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுத்துள்ளார். மீதமுள்ள 4 கோடி ரூபாயை கொடுக்கவில்லை என்றும், இதுதொடர்பாக பலமுறை கேட்டும் சம்பளபாக்கியை கொடுக்காமல் இழுத்தடிப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன், இந்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி  வருமானவரித்துறை நோட்டீஸும் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 11 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்ததற்கான டிடிஎஸ் பத்திரத்தை தயாரிப்பாளர் தரப்பு தாக்கல் செய்யாததால்  வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சிவகார்த்திகேயன் அந்த மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஞானவேல் ராஜா தற்போது தயாரித்து வரும் ரிபல்,சியான் 61 மற்றும் பாட்டு தல ஆகிய திரைப்படங்களில் முதலீடு செய்யவும் அவற்றை விற்பனை செய்யவும் தடைவிதிக்க வேண்டும் என்றும் இந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள சம்பள பாக்கியை பெற்றுத் தரக் கோரி ஒரு மனுவும், வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் மீது ரிட் மனுவும் நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ளார். 2019-2020 மற்றும் 2020-2021 ஆகிய ஆண்டுகளில் அவரது வங்கிக்கணக்கில் இருந்து 91 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டிருப்பதால் இந்த வழக்கினை நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதி சுந்தர் முன்னிலையில் வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கல்வித்துறையில் காமராஜர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது" பிரதமர் மோடி புகழாரம்!
Non-Veg Food Ban: அதிர்ச்சி; உலகிலேயே முதல் நகரம்- குஜராத்தில் அசைவ உணவுகளுக்குத் தடை!
Non-Veg Food Ban: அதிர்ச்சி; உலகிலேயே முதல் நகரம்- குஜராத்தில் அசைவ உணவுகளுக்குத் தடை!
Breaking News LIVE, JULY 15:தமிழ்நாட்டில் படிப்படியாக எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
Breaking News LIVE, JULY 15: தமிழ்நாட்டில் படிப்படியாக எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
Watch Video: என்னம்மா இப்படி பண்றீங்களேமா! சாலையின் நடுவே ரீல்ஸ் செய்த பெண்ணால் கீழே விழுந்த வாகன ஓட்டி!
Watch Video: என்னம்மா இப்படி பண்றீங்களேமா! சாலையின் நடுவே ரீல்ஸ் செய்த பெண்ணால் கீழே விழுந்த வாகன ஓட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | டெல்லி பறக்கும் EPSமாறும் காட்சிகள்?புதுதெம்பில் ஸ்டாலின்Police Pocso Arrest | சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் காவலர் கைது அதிரடி காட்டிய SP மீனாHaridwar Bus Accident | அன்பே சிவம் பட பாணியில்..நடந்த விபத்து...ஹரித்வாரில் பயங்கரம்Rahul Thanks MK Stalin | ’’நன்றி ஸ்டாலின்! நீங்க தான் BEST’’ பாராட்டிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கல்வித்துறையில் காமராஜர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது" பிரதமர் மோடி புகழாரம்!
Non-Veg Food Ban: அதிர்ச்சி; உலகிலேயே முதல் நகரம்- குஜராத்தில் அசைவ உணவுகளுக்குத் தடை!
Non-Veg Food Ban: அதிர்ச்சி; உலகிலேயே முதல் நகரம்- குஜராத்தில் அசைவ உணவுகளுக்குத் தடை!
Breaking News LIVE, JULY 15:தமிழ்நாட்டில் படிப்படியாக எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
Breaking News LIVE, JULY 15: தமிழ்நாட்டில் படிப்படியாக எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
Watch Video: என்னம்மா இப்படி பண்றீங்களேமா! சாலையின் நடுவே ரீல்ஸ் செய்த பெண்ணால் கீழே விழுந்த வாகன ஓட்டி!
Watch Video: என்னம்மா இப்படி பண்றீங்களேமா! சாலையின் நடுவே ரீல்ஸ் செய்த பெண்ணால் கீழே விழுந்த வாகன ஓட்டி!
Thangalaan First Single : தங்கலான் முதல் பாடல்  ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும்.. ஜி.வி பிரகாஷ் இசையில் மினிக்கி ப்ரோமோ இதோ..
தங்கலான் முதல் பாடல் ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும்.. ஜி.வி பிரகாஷ் இசையில் மினிக்கி ப்ரோமோ இதோ..
Mohan G : கண்ட கண்ட கதைய எடுக்குறீங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தை வெளியிட சொன்ன மோகன் ஜி
கண்ட கண்ட கதைய எடுக்குறீங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தை வெளியிட சொன்ன மோகன் ஜி
Watch video : அம்பானி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒலித்த 'ஜெய் ஹோ'.. ஏ.ஆர். ரஹ்மான் செய்த மேஜிக்!
Watch video : அம்பானி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒலித்த 'ஜெய் ஹோ'.. ஏ.ஆர். ரஹ்மான் செய்த மேஜிக்!
காலாவதியான உரிமம் ! தெரு நாய்களை தற்போதைக்கு கட்டுப்படுத்த முடியாது - மாமன்றத்தில் ஆணையாளர் தகவல்
காலாவதியான உரிமம் ! தெரு நாய்களை தற்போதைக்கு கட்டுப்படுத்த முடியாது - மாமன்றத்தில் ஆணையாளர் தகவல்
Embed widget