Simbu Getup : ஆட்டோக்காரனாக மாறிய சிம்பு...! வைரலாகும் வீடியோ..!
நடிகர் சிம்பு ஆட்டோ ஓட்டுனராக நடிக்கும் காட்சி படமாக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைளதங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் சிம்பு. கடுமையான உயடற்பயிற்சி காரணமாக தனது உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படம் மூலமாக ரீ என்ட்ரி அளித்தார். இந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த மாநாடு படம் மாபெரும் ஹிட் படமாக அமைந்தது. இதன்மூலம் சிம்புவின் மாஸ் மீண்டும் தமிழ் சினிமாவில் அதிகரித்தது.
#SilambarasanTR pic.twitter.com/wZSkOU2IbP
— Raj@748 (@Raj6748) April 11, 2022
தற்போது, சிம்பு படப்பிடிப்பு ஒன்றில் ஆட்டோக்காரராக நடிக்கும் காட்சி ஒன்று படமாக்கப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. இதில், ஆட்டோ ஓட்டுனர் கெட்டப்பில் சிம்பு மாசாக காட்சி அளிக்கிறார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிம்பு நடிக்கும் புதிய படத்திற்காக இந்த காட்சி படமாக்கப்பட்டதா? அல்லது விளம்பர படத்திற்காக படமாக்கப்பட்டதா? என்று இதுவரை தெரியவில்லை. ஆட்டோவில் பிதா என்று எழுதப்பட்டுள்ளது.
மாநாடு படத்திற்கு பிறகு வெந்து தணிந்தது காடு, பத்துதல ஆகிய படங்களில் சிம்பு நடித்து வருகிறார். மேலும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் அசத்தினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்