Tamil Connect: "தமிழால் இணைவோம்" ட்விட்டரில் ஒன்றிணைந்த சிம்பு, அனிருத்... பறக்கும் லைக்ஸ்!
தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களாக வளர்ந்து வரும் நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் தங்களது ட்விட்டர் பக்கத்தில் "தமிழால் இணைவோம்" என்று பதிவிட்டுள்ளனர்.

கடந்த 8 ம் தேதி நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய அமித்ஷா, `ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் , ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது `இந்திய மொழியில்' இருக்க வேண்டும். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து இந்தியா முழுவதும் பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. தொடர்ந்து, வைரமுத்து, ஏ.ஆர், ரகுமான் தமிழுக்கு ஆதரவாகவும், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது தாய் மொழியான கன்னடத்திற்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டு வந்தனர். மேலும், தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
தமிழால் இணைவோம் #TamilConnects
— Silambarasan TR (@SilambarasanTR_) April 12, 2022
இந்தநிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களாக வளர்ந்து வரும் நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் தங்களது ட்விட்டர் பக்கத்தில் "தமிழால் இணைவோம்" என்று பதிவிட்டுள்ளனர். தற்போது இதை பார்த்த அவர்களது ரசிகர்கள் ரீ ட்வீட் செய்து ட்விட்டரில் லைக்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
தமிழால் இணைவோம் #TamilConnects
— Anirudh Ravichander (@anirudhofficial) April 12, 2022
#CINEMA | தமிழால் இணைவோம் - சிம்பு - அனிருத் ட்வீட்https://t.co/wupaoCz9iu | #TamilConnects #SilambarasanTR𓃵 #Anirudh #Silambarasan pic.twitter.com/8rhIpH7Cv5
— ABP Nadu (@abpnadu) April 12, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்






















