Pathu Thala Update: இன்று வெளியாகிறது பத்து தல படத்தின் அடுத்த பாடல்... அதிருப்தியில் ரசிகர்கள்.. என்ன நடந்தது?
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தற்போது செகண்ட் சிங்கிள் பாடல் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது.
கௌதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. ஒபிலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஏஜிஆர் எனும் டான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் சிம்பு.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 2017ம் கன்னடத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் படமாக வெற்றி பெற்ற 'மஃப்டி' படத்தின் ரீமேக் என கூறப்பட்டது. ஆனால் அதற்கு விளக்கமளித்த ஒபிலி கிருஷ்ணா இப்படம் மஃப்டி படத்தின் ரீ மேக் கிடையாது. அப்படத்தில் இருந்து நான்கு காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட்டது. 90 % 'பத்து தல' படத்தின் கதை வேறு தான் என்பதை படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் தெளிவுபடுத்தினார் படத்தின் இயக்குனர்.
கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி ஷங்கர், கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். வெந்து தணிந்தது காடு படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சிம்பு - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளது.
அந்த வகையில் பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3ம் தேதி வெளியானது. ஏ.ஆர். ரஹ்மான் குரலில் 'நம்ம சத்தம்' பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்ற அறிவிப்பினை வெளியிட்டது படக்குழு.
அந்த வகையில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தற்போது செகண்ட் சிங்கிள் பாடல் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. முதல் பாடல் மிகவும் மிரட்டலாக வெளியானதை தொடர்ந்து இரண்டாவதாக மெலடி பாடல் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. இந்த பாடல் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என படக்குழு நேற்று தெரிவித்தது.படம் ரிலீசாக இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பெரிய அளவில் ஏதாவது அப்டேட் கொடுப்பார்கள் என மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த சிம்பு ரசிகர்கள் இதெல்லாம் ஒரு அப்டேட்டா என நொந்து கொள்ளும் அளவுக்கு ரசிகர்களை படக்குழு அதிருப்தியில் ஆழ்த்தியதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வெளியாகி வருகிறது.