Watch Video: மறைந்த பாடகர் கே.கே பாடல் பாடி ரசிகர்களை நெகிழ வைத்த சித்தார்த்: வைரலாகும் வீடியோ!
மறைந்த பாடகர் கே.கேவை நினைவு கூறும் வகையில் அவரது பாடலை நடிகர் சித்தார்த் ரசிகர்களுடன் இணைந்து பாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

ஓய் (oye)
சித்தார்த் நடித்து கடந்த 2009ஆம் தெலுங்கில் வெளியான ஓய் (oye) படம் சமீபத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்டது. ஆனந்த் ரங்கா இந்தப் படத்தை இயக்கினார். இப்படம் வெளியானபோது பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் தற்போது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இப்படம் ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாக மாறியிருக்கிறது. மேலும் புதிய பார்வையாளர்களையும் பெற்றிருக்கிறது. சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட்டது. நடிகர் சித்தார்த் இப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தார்.
மறைந்த பாடகருக்கு புகழாரம்
ஓய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசைமைத்திருந்தார். இப்படத்தில் வெயிட்டிங் ஃபார் யூ (Waiting For You) என்கிற பாடலை பிரபல பாலிவுட் பாடகர் கே.கே பாடியிருந்தார். கிருஷ்ணகுமார் குன்னத் (Krishnakumar Kunnath) - KK என பிரபலமாக அறியப்பட்டவர்.
கடந்த 2022ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி கொல்கத்தாவில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது இறப்பு இந்திய இசைத் துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'மின்சாரக்கனவு' படத்தில் இடம்பெற்ற 'ஸ்ட்ராபெர்ரி கண்ணே' என்ற பாடலை கே.கே, ஃபெபி மணியுடன் இணைந்து பாடியிருப்பார். காதல் வளர்த்தேன், காதலிக்கும் ஆசையில்லை, நீயே நீயே, சாமி படத்தில் 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, 'குட்டி' படத்தில் வரும் 'Feel My Love' ,'ஆதி' படத்தில் 'லேலக்கு லேலக்கு லேலா', '12B' படத்தில் ஹாரிஸ் இசையில் 'எங்கேயோ போகின்ற மேகம் நிக்குது' பாடலையும், 'லவ் பண்ணு' (ஒரு புன்னகைப் பூவே) பாடலையும் கே.கே-வே பாடியிருப்பார்.
Siddharth sang ‘I’m waiting for you’ as a tribute to KK❤️#OyeReRelease pic.twitter.com/E2zjtOoyif
— VK(Ramana gaadu’s disciple)🌶️ (@urstrulyvamshi7) February 16, 2024
தற்போது திரையரங்கில் ரீரிலீஸ் செய்யப் பட்டிருக்கும் ஓய் படத்தின் திரையிடலின் போது ரசிகர்களை சந்தித்த சித்தார்த் இந்தப் பாடலை பாடினார். அவருடன் சேர்ந்து அங்கிருந்த ரசிகர்களும் இணைந்துகொள்ள ஒரு வரிகூட விடாமல் மொத்தக் கூட்டமும் இந்த பாடலை பாடிமுடித்தார்கள். இந்தத் தருணம் பாடகர் கே.கே வுக்கு ஒரு புகழாரமாக அமைந்துள்ளது.
மறுபடி நீ
இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடிகர் சித்தார்த் ஒரு பாடலை பாடியுள்ளார். முன்னதாக தரமணி படத்தில் ‘உன் பதில் வேண்டி’ என்கிற பாடலை பாடியிருந்த சித்தார்த், இப்போது ’மறுபடி நீ ‘ என்கிற பாடலை பாடியுள்ளார். சமீபத்தில் இப்பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

