மேலும் அறிய

Siddharth: சித்தா ப்ரமோஷன்.. உள்ளே புகுந்து ரகளை செய்த கன்னட அமைப்பு - பாதியில் சென்ற சித்தார்த்

சித்தா பட ப்ரமோஷனுக்காக பெங்களூரில் பங்கேற்ற சித்தார்த்திடம் கன்னட அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ், தெலுங்கு, இந்தியிலும் மிகவும் முக்கியமான நடிகராக உலா வருபவர் சித்தார்த். இவரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் சித்தா. இந்த படம் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியிலும் வெளியாகியுள்ளது. 

பிரச்சினை செய்த கன்னட அமைப்பு:

இந்த நிலையில், இந்த படத்தை கன்னடத்தில் பிரபலப்படுத்தும் விதமாக பெங்களூரில் நடைபெற்ற விழாவில் சித்தார்த் இன்று பங்கேற்றார். தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த சூழலில், தமிழ்நாட்டிற்கு காவிரி நதிநீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் நாளை கர்நாடக முழுவதும் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். 

இந்த நிலையில், இன்று பெங்களூரில் சித்தா படத்தின் ப்ரமோஷன் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கன்னட அமைப்பினர் உள்ளே புகுந்தனர். அவர்கள் மேடையில் அமர்ந்திருந்த சித்தார்த்தை நோக்கி கன்னடத்தில் ஏதோ கூறினர். மேலும், சித்தார்த்தை வெளியே செல்லுமாறும் அறிவுறுத்தினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சித்தார்த்திற்கு மிக அருகில் நின்று கொண்டு அவர்கள் சித்தார்த்தை மிரட்டும் தொனியில் பேசியதால் சித்தார்த் விழா மேடையில் இருந்து சிரித்துக்கொண்டே பாதியிலே இறங்கிச் சென்றார். 

 

பாதியில் சென்ற சித்தார்த்: 

தமிழ்நாட்டிற்கும் கர்நாடகவிற்கும் இடையே நீண்ட காலமாக நதிநீரை பங்கீட்டுக் கொள்வதில் பிரச்சினை உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த செவ்வாய்கிழமை பெங்களூரில் மட்டும் பந்த் நடைபெற்ற நிலையில், நாளை கர்நாடக முழுவதும் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் அதிருப்தி:

இதனால், தமிழக – கர்நாடக எல்லையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ள சூழலில், கர்நாடக மாநிலம் முழுவதும் அந்த மாநில போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் கன்னட அமைப்பினர் சித்தா பட நிகழ்ச்சியின் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னட படமான கே.ஜி.எஃப்.க்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு அளித்து ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், தமிழ் படத்தின் நிகழ்ச்சியில் அந்த மாநில கன்னட அமைப்புகள் இவ்வாறு நடந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  இடாகி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை பண்ணையாரும், பத்மனியும் மற்றும் சேதுபதி படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League
‘அரசன்’ காட்சிகளை பார்த்து அசந்த சிம்பு..சந்தோஷத்தில் வெற்றிமாறனுக்கு கொடுத்த வாக்குறுதி
‘அரசன்’ காட்சிகளை பார்த்து அசந்த சிம்பு..சந்தோஷத்தில் வெற்றிமாறனுக்கு கொடுத்த வாக்குறுதி
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
LIVE | Kerala Lottery Result Today (12.08.2026): தனலட்சுமி தேடி வருவாளா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (12.08.2026): தனலட்சுமி தேடி வருவாளா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
Embed widget