Shahid Kapoor: இந்திப் படங்களுக்கு ஆதரவு வேண்டும்... தென்னிந்திய ரசிகர்களிடம் ஷாகித் கபூர் வைத்த ரெக்வெஸ்ட்
இந்திப் படங்களுக்கு தென்னிந்திய ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
![Shahid Kapoor: இந்திப் படங்களுக்கு ஆதரவு வேண்டும்... தென்னிந்திய ரசிகர்களிடம் ஷாகித் கபூர் வைத்த ரெக்வெஸ்ட் actor shahid kapoor asks south indain fans to support hindi films Shahid Kapoor: இந்திப் படங்களுக்கு ஆதரவு வேண்டும்... தென்னிந்திய ரசிகர்களிடம் ஷாகித் கபூர் வைத்த ரெக்வெஸ்ட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/09/7410681a4adabc39e5c16d9637ce297f1686302630286571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திப் படங்களுக்கு தென்னிந்திய ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாலிவுட்டில் சுவாரஸ்யமானக் கதைகளைத் தேர்வு செய்து நடித்துவருபவர் ஷாகித் கபூர். ஜப் வி மெட், , ஜைதர், பத்மாவத், உட்தா பஞ்சாப், அர்ஜுன் ரெட்டி ஆகிய முக்கியமானப் படங்களில் நடித்துள்ளார் ஷாகித் கபூர். அண்மையில் விஜய் சேதுபதி மற்றும் ராஷி கன்னா ஆகியவர்களுடன் இணைந்து நடித்த ஃபர்ஸி வெப் சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷாகித் கபூர் தென்னிந்திய ரசிகர்கள் இந்தி திரைப்படங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“பாலிவுட் ரசிகர்கள் பெரிய மனம் படைத்தவர்கள். அவர்கள் எப்படி தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைபடங்களுக்கு அதரவு தருகிறார்களோ அதே போல் தமிழ் ரசிகர்களும் இந்திப் படங்களுக்கு ஆதரவு தர வேண்டும். நாங்களும் நல்ல படங்களை எடுத்திருக்கிறோம்” என கூறியுள்ளார் ஷாகித் கபூர்.
தென் இந்தியப் படங்களில் நடிக்க ஆசை
ஷாகித் கபூர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ப்ளடி டாடி ( Bloody Daddy). விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் புரோமோஷனில் கலந்துகொண்ட ஷாகித் கபூரிடம் ஹாலிவுட்டில் நடிக்க ஆசைப்படுகிறாரா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் சொன்ன ஷாகித் “ நான் கடந்த 20 ஆண்டுகளாக பாலிவுட்டில் நடித்து வருகிறேன். எனக்கு இந்த இடம் செளகரியமாக இருக்கிறது. நான் இங்கு நல்ல கதைகளில் நடிக்க விரும்புகிறேன்.
நீங்கள் என்னை ஹாலிவுட்டில் நடிப்பதைப் பற்றி கேட்டால் நான் அதற்கு நேரெதிரான பதிலைச் சொல்கிறேன். ஹாலிவுட்டில் ஏதோ ஒரு குப்பைப் படத்தில் நடிப்பதற்கு பதிலாக நல்ல கதைகளைக் கொண்ட தமிழ் அல்லது மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிப்பதை நான் தேர்வு செய்வேன்.” எனக் கூறியுள்ளார்.
”மனசாட்சிக்கு நேர்மையாக இருக்க விரும்புகிறேன்”
”இப்போது எனக்கு ஹாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கிறதென்று வைத்துக்கொள்வோம் அதற்கான நான் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்றில்லை. ஒரு படத்தில் நடிப்பதற்கு உங்களுக்குள் இருந்து நேர்மையான ஒரு உற்சாகம் வெளிப்பட வேண்டும் . மற்ற மொழிப்படங்களில் நடிப்பதற்கு மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது. சிலர் இதனை கச்சிதமாக நிகழ்த்துகிறார்கள்.
ஒரு நடிகர் ஒரு படத்தைத் தேர்வு செய்வதற்குமுன் தன் மனசாட்சிக்கு நேர்மையாக இருக்க வேண்டும். எந்தக் கதையில் வேண்டுமானால் நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் என்னை உற்சாகப்படுத்தும் ஏதாவது அதில் இருக்க வேண்டும் இல்லையென்றால் நான் அதைப்பற்றி கண்டுகொள்ளப் போவதில்லை.” என மேலும் கூறினார் ஷாஹித் கபூர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)