Actor Santhanam: பழனி முருகன் கோவிலில் நடிகர் சந்தானம் கிரிவலம் வந்து சாமி தரிசனம்
சந்தானம் நடிக்கும் வடுகப்பட்டி ராமசாமி என்ற திரைப்படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சந்தானம் மற்றும் திரைப்பட குழுவினர் பழனியில் தங்கியுள்ளனர்.
பழனி முருகன் கோவில் குடமுழுக்கு நிறைவடைந்த பிறகு அடுத்தடுத்து சினிமா நடிகர்கள் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தா, கெளதம் கார்த்திக் , மஞ்சிமா மோகன், உள்ளிட்ட திரை பிரபலங்கள் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக வந்தனர். இதனை தொடர்ந்து திரைப்பட நடிகர் சந்தானம் சாமி தரிசனம் செய்ய இன்று பழனி முருகன் கோயில் வந்தார்.
முன்னதாக மலையடிவாரத்தில் உள்ள மூன்று கீலோ மீட்டர் கிரிவலப் பாதையில் நடிகர் சந்தானம் கிரிவலம் வந்தார். பின்னர் ரோப்கார் மூலமாக மலை மீது சென்ற நடிகர் சந்தானம் முருகனை தரிசனம் செய்தார். நடிகர் சந்தானத்திற்கு பழனி கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சந்தானம் நடிக்கும் வடுகப்பட்டி ராமசாமி என்ற திரைப்படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சந்தானம் மற்றும் திரைப்பட குழுவினர் பழனியில் தங்கியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்