Rajinikanth: 'ரஜினிக்கு எதற்கு சூப்பர் ஸ்டார் பட்டம்?' .. எஸ்.வி.சேகர் கேட்ட கேள்வி.. அதிர்ந்த அரங்கம்..!
தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பிரச்சினை சென்று கொண்டிருக்கும் நிலையில், அதுபற்றி நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பிரச்சினை சென்று கொண்டிருக்கும் நிலையில், அதுபற்றி நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
லோக்கல் சரக்கு ட்ரெய்லர் வெளியீட்டு விழா
வராஹ சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் தயாரிப்பில், எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பிரபல நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’. இதில் ஹீரோயினாக உபாசனா நடித்திருக்கிறார். மிக முக்கியமான வேடத்தில் யோகி பாபு நடித்திருக்கும் நிலையில், சென்ட்ராயன், சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சிங்கம் புலி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் கே.ராஜன், இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தீனா, நடிகை வனிதா விஜயகுமார், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜய முரளி, இணைச் செயலாளர் செளந்தரராஜன்ஆகியோர் கலந்து கொண்டனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினியா?
இந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்.வி.சேகர், 'இதுவரை என் வாழ்வில் ஒரு துளி கூட மதுவை அருந்தியதில்லை, அதேபோல் சிகரெட் புகைத்தது இல்லை. இரண்டு படங்களில் மட்டும் மது குடிப்பது போல் நடித்தேன், பிறகு அது கூட தேவையில்லை என்று விட்டுவிட்டேன். உள்ளே வந்த பிறகு தான் ‘லோக்கல் சரக்கு’ என்ற தலைப்பை பார்த்தேன். சரக்குக்கும் நமக்கும் சம்மந்தம் இல்லை' என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘சினிமாவுக்குள்ள வர்றவங்க தன்னம்பிக்கையோட இருங்க. அதை விட்டுட்டு உங்களை யாரோடவும் ஒப்பிடாதீங்க. ரஜினிக்கு சொல்றாங்க, அடுத்த சூப்பர் ஸ்டார் யாருன்னு கேக்குறாங்க. முதல்ல ரஜினிக்கு எதுக்கு சூப்பர் ஸ்டார் பட்டம்?.. ரஜினி என்ற பெயரே சூப்பர் ஸ்டாரை விட உலகளவில் மிக அதிகமாக சென்றிருக்கக்கூடிய பெயர்.
எம்ஜிஆர், சிவாஜி ஆகியோரைப் போல ரஜினி என்ற மூன்றெழுத்து உலகம் முழுக்க சென்றிருக்கிறது. அதனால் அடைமொழி வச்சித்தான் ரஜினியை சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. ஆனால் இன்னைக்கு உலகளவில் படத்தின் முதல் நாள் கலெக்ஷனை எடுத்துப் பார்த்தாலும் அந்த 72 வயது இளைஞரை, 23, 24, 40, 42 வயதுக்காரர்கள் யாரும் ஜெயிக்க முடியவில்லை. அதனால் அதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. ரஜினியும் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்’ என எஸ்.வி.சேகர் அந்நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
மேலும் படிக்க: Jailer Box Office Collecton Day 3: களைகட்டும் தியேட்டர்கள்.. கல்லா கட்டும் ஜெயிலர்.. 3 நாளில் இவ்வளவு கோடி வசூலா?