Robo Shankar : பெரிய செயின் பரிசாக குடுத்தார்...தனுஷ் பற்றி எமோஷனலாக பேசிய ரோபோ சங்கர்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த தனக்கு சினிமாவில் மிகப்பெரிய வாய்ப்பு கொடுத்தவர் நடிகர் தனுஷ்தான் என ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்
ரோபோ சங்கர்
சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்று சினிமாவில் இன்று நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யார் நிகழ்ச்சியின் முதல் சீசன் முதல் எபிசோட் முதல் போட்டியாளராக கலந்துகொண்டவர். விஜயகாந்த் , எம்.ஜிஆர், கமல் போன்ற நடிகர்களைப் போல் மிமிக்ரி செய்து ரசிகர்களை கவர்ந்தார். பல படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் ரோபோ சங்கருக்கு நகைச்சுவை நடிகராக பெரிய அடையாளத்தைக் கொடுத்த படம் என்றால் தனுஷின் மாரி படம் தான். இந்த படத்தில் தனுஷுடன் பணியாற்றிய அனுபவத்தை ரோபோ சங்கர் பகிர்ந்துகொண்டார்.
தனுஷ் பற்றி ரோபோ சங்கர்
" மாரி படத்தில் சனிக்கிழமை கதாபாத்திரத்தில் நான் நடிக்கப்போவதாக இயக்குநர் பாலாஜி மோகன் தனுஷிடம் கூறினார். ரோபோ சங்கர் பல்காக இருப்பாரே அவர் முன் நான் ஒல்லியாக தெரிவேன் என்று தனுஷ் கூறியுள்ளார். அப்போது நான் ஜோடி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தேன் அதனால் ஃபிட்டாக இருந்தேன். மாரி படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாள் முதல் கடைசி நாள் வரை எல்லா காமெடியும் நான் செட்டில் உருவாக்கியவைதான். டப்பிங்கிலும் தனுஷ் எதுவுமே சொல்லவில்லை. சூப்பரா இருக்கு ரோபோ அப்டியே இருக்கட்டும் என்று தனுஷ் சொன்னார். மாரி படம் வெளியாகி மூன்றாவது நாளில் தனுஷ் எனக்கு பெரிய தங்க செயின் ஒன்று பரிசளித்தார். அதன்பின் என்னுடைய திருமண நாளில் தங்கத்தில் விநாயகர் டாலர் ஒன்று பரிசாக கொடுத்தார்.
பவர் பாண்டி படம் இயக்கப்போகும் போது தனுஷ் எனக்கு கால் செய்து பேசினார். இந்த படத்தில் உங்களுக்கு பெரிய ரோல் இல்லை ஆனான் எனக்கு பிடித்தவர்கள் எல்லாம் இந்த படத்தில் இருக்க வேண்டும் என்று தனுஷ் கூறினார். தனிப்பட்ட முறையில் தனுஷ் எனக்கு மிகப்பெரிய உதவி எல்லாம் செய்திருக்கிறார். என்னுடைய பிறந்தநாள் , வெட்டிங் டே எல்லாத்துக்கும் என் வீட்டில் இருந்துதான் அவருக்கு சாப்பாடு போகும். அதேபோல் படப்பிடிப்பின் போதும் அவர் வீட்டு சாப்பாடு தான் சாப்பிடுவேன். தனுஷ் மட்டுமில்லாமல் அவர் வீட்டில் இருந்த அனைவரும் நன்றாக பழகினார்கள். கொஞ்சம் நேரம் ஜாலியாக இருக்கலாம் என்றால் ரோபோ சங்கரை கூப்பிடுங்கள் என்றுதான் சொல்வார்கள்." என ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்
Robo Sankar share about dhanush na❤️💎#Dhanush #Kubera #NEEK #IdlyKadai pic.twitter.com/xJsJ7vlpLQ
— karan Anderson (@karanAnderson7) November 1, 2024