வீடு ஜப்தி பற்றி கவலை இல்லை.. கோயில் கோயிலாக கெனிஷாவுடன் டூர்.. ரவி மோகன் ரொம்ப மாறிட்டார்!
நடிகர் ரவி மோகன் தனது காதலியுடன் பிரம்மாண்டமான கோயிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன் தற்போது கராத்தே பாபு என்ற படத்தில் நடித்து விருகிறார். அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிரதர், காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் தொடர் தோல்வியை சந்தித்துள்ளன. இருப்பினும் வரிசையாக இவர் நடிக்கும் படங்களின் பட்டியலும் நீள்கிறது.
சீனி படத்திற்கு வந்த சிக்கல்
ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள சீனி திரைப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இப்படம் வெளியானால் ரவி மோகன் மார்க்கெட்டும் அல்ல ஐசரி கணேஷ் மீதான நம்பிக்கையும் போய்விடும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. இதனால், சீனி படத்திற்காக 30 நாட்கள் மீண்டும் படப்பிடிப்பை நடத்தி முடிந்தவரை படத்தை தேற்ற முயற்சித்து வருகிறார்களாம். இப்படி ரவி மோகன் கைவைத்த படம் எல்லாம் இப்படி இருக்க, சொந்த வாழ்க்கையிலும் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.
வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ்
பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருப்பது நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரம். இவர்களின் விவாகரத்து பிரச்சினையில் முக்கிய காரணமாக இருந்தது பாடகி கெனிஷா. ஆரம்பத்தில் இருவரும் நண்பர்கள் என தெரிவித்தனர். ஆனால், ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ரவி மோகன், கெனிஷாவுடன் கைக்கோர்த்தபடி ஜோடியாக வந்தது பெரும் சர்ச்சையானது. ஆர்த்திக்கு ஆதரவாக பல நடிகைகள் குரல் கொடுத்தார்கள். இந்நிலையில், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் வாழ்ந்த வீட்டை வங்கி நிர்வாகிகள் ஜப்தி செய்ய நோட்டீஸ் வெளியிட்டதாக தகவல் வெளியானது.
காதலியுடன் ஊர் சுற்றும் ரவி மோகன்
சென்னை ஈசிஆரில் உள்ள சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய அனுப்பப்பட்ட நோட்டீஸை ரவி மோகன் வாங்க மறுத்துள்ளார். கடந்த 10 மாதங்களாக தவணை செலுத்தாத காரணத்தால் பங்களாவை ஜப்தி செய்ய எச்டிஎப்சி வங்கி நோட்டீஸ் அனுப்பியது. கொரியர் மூலம் ஊழியர் கொண்டு வந்த நோட்டீஸை ரவி மோகன் வாங்க மறுப்பு தெரிவித்ததோடு, வங்கியில் வந்து பெற்றுக்கொள்வதாக தெரிவித்திருக்கிறார். அடுத்தடுத்து சர்ச்சைகளை சிக்கி வரும் ரவி மோகன் தற்போது தனது காதலியுடன் திருப்பதி சாமி தரிசனம் செய்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. கணவன் மனைவி போல் இருவரும் அணிந்திருக்கும் உடையை பார்த்து இருவரும் திருமணம் செய்துவிட்டதாகவும் கிசுகிசுக்க தொடங்கிவிட்டனர். மனைவிக்கு விவாகரத்து வழங்கிவிட்டு காதலியுடன் கோயில் கோயிலாக சுற்றி வருவதாக ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.





















