மேலும் அறிய

விவாகரத்து கிடைக்கும்வரை நடிக்க மாட்டேன்...நடிகர் ரவி மோகன் அதிரடி பேட்டி

தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கிடைக்காத வரை தான் இனிமேல் படங்களில் நடிக்கப்போவது இல்லை என்று நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்

நான் சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது என்னுடைய தனிப்பட்ட பேட்டி. இது சினிமாவை சார்ந்தது கிடையாது. இத்தன நாள் நான் பேசமால் இருந்ததற்காக நான் முட்டாளாக உணர்கிறேன். ரவி மோகன் என்றால் சாதுவானவர் என்று சொல்கிறார்கள். ஆனால் சாது மிரண்டால் காடு பொல்லாது. நான் முதலில் சொல்ல விரும்புவது எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை என்னுடைய படம் இனிமேல் திரையரங்கில் வெளியாகாது. ஏனால் என்னால் நடிக்க முடியவில்லை. இத்தனை நாள் என்னுடன் நின்ற அனைவருக்கும் நன்றி. 

விவாகரத்து கிடைக்கும்வரை படத்தில் நடிக்கமாட்டேன்

23 வருடம் இரவுப் பகலாக நான் என் குடும்பத்திற்காக நான் வேலை செய்திருக்கிறேன். நான் நடித்த 95 சதவித படங்கள் வெற்றிப்படங்கள். என்னுடைய அப்பாவும் அண்ணனும் 4 வருடங்கள் வேலையே செய்யல. ஆனான் ஒவ்வொரு நாளும் நான் வேலைக்கு சென்றிருக்கிறேன். அவர்கள் தான் எனக்கு எல்லாமே. இத்தன நாள் நான் பேசாமல் இருந்ததே என்னுடைய தப்பு. பெண் என்பதால் சரி விட்டுரலாம் என்று அமைதியாக இருந்துவிட்டேன். என்ன ஃபெமினிசம். பெமினிசம் பத்தி தெரியுமா உங்களுக்கு. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக படமெடுத்தவன் நான். பேராண்மை படத்தில் நான் சொன்ன வசனம் தான் இன்று வரை எல்லாரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய அம்மா என்னை அப்படி வளர்க்கவில்லை. என்னுடைய கடந்த கால வாழ்க்கையில் நான் 14 வருடங்கள் இருந்தேன். அப்போது எல்லாம் என்னை கடவுள் என்று சொன்னார்களே. இந்த இரண்டு வருடங்கள் நான் அமைதியாக இருந்தது உண்மை ஜெயிக்கனும் என்கிற ஒரே காரணத்திற்காக தான் . உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கு கொஞ்சம் காத்திருங்கள். 

குழந்தைகளை பார்க்க முடியல

என்னுடைய சொந்த குடும்பத்தைப் பற்றி நான் எப்படி பேசுவேன். 14 வருடம் எதுவும் பேசாமல் எல்லாத்தையும் பொறுத்துகிட்டேன். என் பிள்ளைகளை பார்க்க முடியவில்ல. அவர்கள் ரெண்டு பேருக்கும் இத்தனை ஆண்டுகளாக ஸ்கூல் ஃபீஸ் மட்டும் 50 லட்சம் கட்டி வந்திருக்கிறேன். பாசத்தை பற்றி என்னிடம் பேசாதீர்கள். பார்க்க விட மாட்றாங்க. அவர்களின் ஃபோனை பறித்து வைத்திருக்கிறார்கள். பள்ளிக்கு பாடிகார்ட் அனுப்புகிறார்கள். அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்று தான் நான் ஓடி வந்தேன். இருக்கிற வரை சரியாக பார்த்துக்கொள்ள முடியவில்லை என்றால் இல்லாதபோது மூடிட்டு இருக்கனும் . 

கெனிஷா போய்விட்டார்

குறிப்பாக நான் சொல்ல வேண்டியது ஒரு பெண்ணை சைபர் புல்லிங் பண்ணி அவரை என் வாழ்க்கையில் இருந்து விரட்டிவிட்டீர்கள். அவர் எங்கிருந்தாலும் நன்றாகதான் இருக்கப் போகிறார். உங்களை எல்லாம் நான் சும்மாவே விடமாட்டேன் . இது என் அண்ணனுக்கு நடந்திருந்தாலும்  நான் இது தான் செய்வேன். என் வீட்டைவிட்டு எதுவுமே இல்லாமல் வெளியே வந்து இன்று நான் வாடகை வீட்டில் இருக்கிறேன். ஆனால் இன்று அவர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள வீட்டில் நன்றாக இருக்கிறார்கள். எவ்வளவு கேலி செய்தாலும் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஏனால் நான் செலிபிரிட்டி. முதலில் நான் ஒரு மனிதன். என்னை மனிதனாக புரிந்துகொண்டு என் கூட நின்றவர் தான் கெனிஷா. அவர் மீது சைபர் தாக்குதல் நடத்தி அவர் இப்போது போய்விட்டார்.  நான் பார்க்காத நடிகைகளா. என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பது தான் . அவர்களின் அழகில் மயங்கி போய்ட்டேனா. என் மீது பழி போட ஒரு காரணம் வேண்டும் கெனிஷா மீது பழி போடத் தொடங்கிவிடார்கள். அந்த வீட்டில் கேட்டுப் பாருங்கள் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்று. அந்த குடும்பம் வேண்டாம் என்று என் அம்மா அப்பா என் காலில் விழுந்து கேட்டார்கள். 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget