Actor Ranjith: "தமிழ்நாட்டை ஆயிரம் விஜய் வந்தால் கூட காப்பாற்ற முடியாது" நடிகர் ரஞ்சித் பேட்டி
தமிழ்நாடு தற்போது இருக்கும் நிலையில் ஆயிரம் விஜய் வந்தால் கூட காப்பாற்ற முடியாது என்று நடிகர் ரஞ்சித் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியல் வருகை
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறது. தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பொதுக்கூட்டம் தொடர்பான முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. இப்படியான நிலையில் விஜயின் அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் விஜயின் அரசியல் வருகை குறித்து நடிகர் ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுவரை தமிழ் நாட்டிற்கு என்ன நல்லது நடந்தது?
தமிழ்நாடு அரசியல் நிலவரத்தைப் பற்றி கேள்வி எழுப்பப் பட்ட போது நடிகர் ரஞ்சித் இப்படி பதிலளித்துள்ளார்.
“இதுவரை எத்தனையோ கட்சிகள் ஆட்சிக்கு வந்து சென்றிருக்கின்றன. இந்த கட்சிகளால் தமிழ்நாட்டிற்கு என்ன நல்லது நடந்தது. மது ஒழிப்பை ஒழிப்போம் என்று சொன்னார்கள். இலவச கல்வி வழங்கப் படும் என்று சொன்னார்கள் எதையாவது நடைமுறைபடுத்தினார்களா? ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் நிற்கும் போது ஆயிரகணக்கான வாக்குறுதிகளை கொடுப்பார்கள்.
ஆனால் அதை எதையும் நிறைவேற்ற மாட்டார்கள். ஒருவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், அவரை தூக்கி சிறையில் அடைக்க முடியாது. ஒரு ஓட்டுக்கு ஆயிரம் கணக்கில் பணம் கொடுக்கிறார்கள். இப்போதெல்லாம் க்வாட்டரும் கோழி பிரியானியும் விலை குறைந்து விட்டன. ஒரு தலைக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு வீட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் கொடுக்கிறார்கள். ஒரு எம்.எல்.ஏ.வுக்கு போட்டியிட வேண்டும் என்றால், அதற்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடும் நிலை தான் இங்கு இருக்கிறது. இந்த பணம் எல்லாம் சம்பாதிக்க அந்த நபர் எல்லா முறைகேடான வேலைகளையும் செய்வார்.
இன்றைய தலைமுறை இளைஞர்கள் தங்களது செல்ஃபோனை விட்டு ஆர்.டி ஐ மூலம் இந்த தகவலை எல்லாம் தெரிந்துகொள்ளலாம். நம்மைச் சுற்றி நடப்பதை எல்லாம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.
விஜய்யின் அரசியல் வருகை குறித்து
நடிகர் விஜயின் அரசியல் குறித்து ரஞ்சித் பேசியபோது “ விஜய் அரசியலுக்கு வருவது குறித்து நான் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டேன். ஆனால் புதிதாக ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அவரை இங்கு இருப்பவர்கள் உள்ளே வரவிடமாட்டார்கள் தாங்களே எல்லாவற்றையும் திருடிக் கொள்ள வேண்டும் என்பது தான் அவர்களில் எண்ணம். தமிழ்நாடு இப்போதிருக்கும் நிலைமையில் ஒரு விஜய் இல்லை ஆயிரம் விஜய் வந்தால் கூட காப்பாற்ற முடியாது. இப்படியான நிலையில் விஜய் அரசியலுக்கு வந்து நான் சொன்னதை எல்லாம் மாற்றிக் காட்டினார் என்றால் அவரை கடவுளாக கும்பிடுவேன், நெஞ்சில் பச்சைக் குத்திக் கொள்வேன்” என்று ரஞ்சித் தெரிவித்தார்
மேலும் படிக்க : Manjummel Boys Review: குணா குகையில் நடந்த உண்மை சம்பவம்.. மஞ்சும்மல் பாய்ஸ் பட விமர்சனம்!