மேலும் அறிய

Ranbir Kapoor: ரொம்ப கவலையா இருக்கு...மகளை நினைத்து கவலைப்பட்ட ரன்பீர் கபூர்..! என்னதான் ஆச்சு?

ரன்பீரிடம் தந்தையான பிறகு அவருக்கு என்ன மாற்றத்தை உணர்ந்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அப்போது 40 வயதாகும் தான் ஏன் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டேன் என்று ஆச்சரியப்படுகிறேன் என கூறினார்.

சவூதி அரேபியாவில் நடைபெற்ற சர்வதேச ரெட் சீ திரைப்பட திருவிழாவில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். 

பொதுவாக பிரபலங்கள் பலரும் இளம் வயதில் திருமணம் செய்துக் கொள்ளாமல், தங்களுடைய கேரியரில் வெற்றி அடைந்த பிறகு அல்லது கேரியரில் சரிவு ஏற்படும் போது அந்த முடிவை கையில் எடுக்கிறார்கள். இதில் ஆண், பெண் என்ற பேதமில்லாமல் இல்லை. இதனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தாலும் வயதுக்கும் திருமண வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை என்பதை ஒவ்வொருவரும் உணர்த்தவே செய்கிறார்கள். 

அந்த வகையில் 40 வயதான பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கும், 29 வயதான நடிகை ஆலியா பட்டுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி மும்பையில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. பாலிவுட்டின் மிகவும் கியூட் ஜோடிகளாக வலம் வந்த இந்த தம்பதியினருக்கு இந்திய திரையுலகினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்திருந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக ஆலியா பட் அறிவித்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

அதனைத் தொடர்ந்து நவம்பர் 6 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்ததாக இருவரும் தங்கள் சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்தனர். இந்த குழந்தைக்கு ராஹா என பாட்டி நீது கபூர் பெயர் சூட்டினார். தூய்மையான வடிவத்தில் தெய்வீக பாதை என்பதே இப்பெயரின் பொருளாகும். இதனிடையே குழந்தை பிறந்த பிறகு எங்களின் வாழ்க்கையே முற்றிலுமாக மாறிவிட்டது என்றும், எனது பயணம் எப்படி செல்ல போகிறது என்பதை மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றும் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆலியா பட் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் சர்வதேச ரெட் சீ திரைப்பட திருவிழாவில் பேசிய ரன்பீர் கபூர், ராஹா குறித்த தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார். அவரிடம் தந்தையான பிறகு அவருக்கு என்ன மாற்றத்தை உணர்ந்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அப்போது 40 வயதாகும் தான் ஏன் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டேன் என்று ஆச்சரியப்படுகிறேன்.

எனது மிகப்பெரிய கவலை என்னவென்றால், குழந்தைக்கு 20 அல்லது 21 வயதாக இருக்கும்போது, ​​​​எனக்கு 60 வயது இருக்கும். நான் அவர்களுடன் கால்பந்து விளையாட முடியுமா? நான் அவர்களுடன் ஓட முடியுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் மனைவி ஆலியா பட் தன்னை விட அதிகமாக வேலை செய்வதாகவும் அவர் புகழ்ந்துள்ளார். ரன்பீர் கபூரின் இந்த கருத்து ரசிகர்களிடத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Embed widget