ராஜ்கிரண் மேல் தெரியாமல் உரசிய நபர்..சண்டைக்கு பாய்ந்த தனுஷ்
நடிகர் ராஜ்கிரண் மீது உரசிவிட்ட காரணத்தினால் நடிகர் தனுஷ் ஒருவரை அடிக்க சென்றதாக நிகழ்ச்சி ஒன்றில் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்

தனுஷ்
நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை படத்தை இயக்கி முடித்துள்ளார். நித்யா மேனன் , ராஜ்கிரன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள் ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார் . டான் பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது .வரும் ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது
தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி படத்தில் நடிகர் ராஜ்கிரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தற்போது இட்லி கடை படத்தில் இரண்டாவது முறையாக தனுஷ் இயக்கத்தில் அவர் நடித்துள்ளார். இட்லி கடை மற்றும் பவர் பாண்டி ஆகிய இரு படங்களில் தனுஷூடன் பணியாற்றிய அனுபவத்தை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ராஜ்கிரன் பகிர்ந்துள்ளார்
உதவி இயக்குநரை அடிக்கப் போன தனுஷ்
பவர் பாண்டி படத்தின் போது இயக்குனர் தனுஷும் சரி வேகம் படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜூம் சரி , இருவரும் ரொம்ப வேகமாக செயல்படக் கூடியவர்கள். ஒரு ஷார்ட் முடிந்து அடுத்த ஷாட் பக்கத்து அறையில் என்பார்கள். இந்த அறையில் இருந்து லைட்டை அந்த அறைக்கு மாற்ற கொஞ்ச நேரம் ஆகும் என்பதால் நான் சிகரெட் பிடிக்க வெளிய போவேன். உடனே ஒரு உதவி இயக்குனர் வந்து சார் ஷாட் ரெடி என்று என்னை அழைத்துச் சென்றுவிட்டார். விசாரித்தபோதுதான் தெரிந்தது ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒருநாள் படப்பிடிப்பை தொடங்கும் போது அந்த மொத்த இடத்திற்கும் லைட்டிங் செய்து விடுவார் என்று. என்னை சிகரெட் பிடிக்கவிடாமல் அழைத்துவந்த தகவல் தனுஷூக்கு தெரிந்ததும் உடனே தனது உதவி இயக்குனரை திட்டினார். ஐயா சிக்ரெட் பிடிக்கிறப்போ ஏன் கூட்டிட்டு வந்த என்று தனது உதவி இயக்குநரை திட்டினார். அதேபோல் படப்பிடிப்பின் போது ஒருவர் என்னை உரசி சென்று விட்டார் . உடனே கோபமான தனுஷ் அவருடன் சண்டைக்கு போய்விட்டார். தனுஷூக்கு என் மேல் அவ்வளவு பிரியம். என்னை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருக்கும்" என நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்
Rajkiran about @dhanushkraja speed in sets of #idlykadai #Dhanush pic.twitter.com/LOTLQA3eql
— Raayan™ (@Simp_ly_exist) January 15, 2025

