ஏசி ரூம்ல உக்காந்து சம்பாதிக்கிறார்...இளையராஜா பற்றி ரஜினி சர்ச்சை பேச்சு...30 ஆண்டு பழைய மோதலை கிளறிய
30 ஆண்டுகளுக்கு முன் இசைஞானி இளையராஜா பற்றி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சர்ச்சைக்குரிய பேச்சு தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது

தமிழ்நாடு அரசு சார்பாக இசைமைப்பாளர் இளையராஜாவுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது ரசிகர்களிடையே கலவையான எதிர்வினைகளை சந்தித்து வருகிறது. இதேபோல் 30 ஆண்டுகளுக்கு முன் இளையராஜாவின் 500 ஆவது பட விழாவில் இளையராஜா பற்றி ரஜினி பேசியது தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது
இளையராஜா பாராட்டு விழாவில் ரஜினி
இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப்பயணத்தை போற்றும் விதமாகவும் லண்டனில் இளையராஜா சிம்பனி இசை நிகழ்த்தியதை கெளரவிக்கும் விதமாகவும் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடத்தியதும முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் , கமல்ஹாசன் ஆகிய தமிழ் சினிமாவின் இரு உச்ச நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள்.
நிகழ்ச்சியில் இளையராஜா பற்றி நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பாராட்டி பேசினார். ரஹ்மானின் வருகைக்குப் பின் இளையராஜா மார்கெட் இழந்தது , காப்புரிமைக்கு எதிரான சட்டப் போராட்டம் , மனைவி ஜீவா மற்றும் மகள் பவதாரிணியின் மரணம் ஆகியவற்றைப் பற்றி ரஜினி பேசியது பலவரை கவர்ந்தது. பின் ஜானி படத்தின் ரெக்கார்டிங்கின் போது இளையராஜா அரை பாட்டில் பீரை அடித்துபோட்ட ஆட்டம் பற்றியும் நடிகைகளைப் பற்றி கிசுகிசு பேசியது பற்றியும் ரஜினி கலகலப்பாக பகிர்ந்துகொண்டார். இந்த பேச்சுக்கு நேற்று தொடங்கி சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் வந்தபடி உள்ளன . முதலமைச்சர் அமர்ந்திருக்கும் மேடையில் இப்படியா பேசுவது என பலர் ரஜினியின் பேச்சை விமர்சித்தனர். அண்மையில் கூலி இசை வெளியீட்டு நிகழ்ச்சியிலும் மலையாள நடிகர் செளபின் சாஹிர் பற்றி ரஜினி பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு முன் இளையராஜாவின் 500 ஆவது பட விழாவில் இளையராஜா பற்றி ரஜினி பேசியது தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது
ஏசி ரூமில் உட்கார்ந்து சம்பாதிக்கிறார்
மணிரத்னம் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியான அஞ்சலி படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இது அவரது 500 ஆவது படம். இந்த படத்தின் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது இளையராஜா பற்றி பேசிய ரஜினி " அதில் ரஜினி,
நாங்கெல்லாம் பாருங்க வெயில்லையும் மழையிலயும் கஷ்டப்பட்டு நடிக்கிறோம். ஆனா இவரு பாருங்க ஏசி ரூம்ல உக்காந்துகிட்டு அந்த ரூபாய சம்பாதிக்கிறார் என்று பேசிவிட்டார்." அது அந்த சமயம் பெரிய விவாதப் பொருளானது. பத்திரிகைகளில் மாறி மாறி கட்டுரைகள் வந்தன. ஒரு ஹீரோவின் சம்பளம் என்பது இசையமைப்பாளரின் சம்பளத்தை ஒப்பிடும்போது ஏகப்பட்ட மடங்கு. இப்படி கம்பேர் செய்திருக்கக் கூடாது என்றும், இசை என்பது ஒரு வேலை நடிப்பு என்பது ஒரு வேலை இரண்டையும் ஒரே தராசில் வைத்து ஒப்பிடக்கூடாது என்றும், சில பத்திரிகைகளில் அப்படி ஆர்வமாக இருந்தால் ரஜினிகாந்த் இசை அமைக்க செல்லலாமே என்று கிண்டலாகவும் பல கட்டுரைகள் வந்தன." இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தற்போது நெட்டிசன்கள் ரஜினியை விமர்சித்து வருகிறார்கள்.





















