மேலும் அறிய

கமலுடன் நடிக்கிறேன் ஆனா இயக்குநர் ஃபிக்ஸ் பண்ணல...கழற்றிவிட பட்டாரா லோகேஷ் கனகராஜ்? ஷாக் கொடுத்த ரஜினி

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் கமலுடன் இணைந்து நடிப்பதை நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களிடன் உறுதிபடுத்தியுள்ளார்

46 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் தகவலை கடந்த வரம் கமல் உறுதிபடுத்தினார். இன்று விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினியும் இந்த தகவலை உறுதிபடுத்தினார். ஆனால் இந்த படத்தின் இயக்குநர் யார் என்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை என்றும் ரஜினி தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது

46 ஆண்டுகளுக்குப் பின் இணையும் ரஜினி கமல் 

இந்த ஆண்டு கமல் நடித்த தக் லைஃப் மற்றும் ரஜினியின் கூலி ஆகிய இரு படங்களும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவின் இரு முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தின. இப்படியான நிலையில் 46 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்த தகவலை நடிகர் கமல் ஹாசன் கடந்த வாரம் துபாயில் நடந்த சைமா விருது விழாவில் உறுதிபடுத்தினார். கமல் பேசியபோது " எங்களுக்குள் போட்டி என்பது நீங்கள் ஏற்படுத்திவிட்டது தான். ஆனால் எங்களுக்கு இது பெரிய விஷயம் இல்லை. ஒரு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்பதால் தான் இத்தனை ஆண்டுகள் பிரிந்திருந்தோம். நாங்கள் இணைந்து நடிப்பது  தொழில் ரீதியாக வேண்டுமானால் பெரிய விஷயமாக இருக்கலாம் ஆனால் எங்களைப் பொறுத்தவரை இப்போதாவது நடக்கிறதே என்று சந்தோஷம் தான். எங்கள் இருவரது படங்களை நாங்களே தயாரிக்க வேண்டும் என்கிற ஆசை எப்போதுமே எங்களுக்கு இருந்தது. இப்போதாவது நடக்கட்டும் ." என்று கூறினார். 

கமலுடன் நடிப்பது பற்றி ரஜினி 

இன்று விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி , கமலுடன் இணைந்து நடிப்பதை உறுதிபடுத்தினார் " ஜெயிலர் 2 படத்திற்கு பின்  நானும் கமலும் நடிக்கிறோம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஆனால் படத்திற்கான கதை மற்றும் இயக்குநரை இன்னும் உறுதி செய்யவில்லை" என ரஜினி கூறியுள்ளார்

ரஜினி கமல் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவதை நினைத்து உற்சாகத்தில் இருந்த ரசிகர்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளார்கள். லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கவில்லை என்றால் வேறு எந்த இயக்குநர் இப்படத்தை இயக்குவார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது

 

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget