Actor Rahman : 'எப்போது வந்தாலும் இதான் செய்வாரு” கடற்கரையை சுத்தம் செய்யும் ஜெர்மன் பயணி... ரஹ்மான் வெளியிட்ட வீடியோ
கேரளாவில் உள்ள அழகான கடற்கரை ஒன்றை சுற்றுலா பயணி ஒருவர் சுத்தம் செய்யும் வீடியோ ஒன்றை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் ரஹ்மான்
கடற்கரைகளுக்கு என தனி அழகு உள்ளது. எந்த அளவுக்கு அவை சிறப்பு வாய்ந்து இருக்கிறதோ அதே அளவுக்கு அவை மாசுபட்டும் வருகின்றன. கடலுக்குள் குப்பைகளை கொட்டுவது அதிகமாகி வருகின்றன. கடலோர பகுதிகளை சுத்தம் செய்ய நகராட்சிகளுக்கு நல்ல தொகை செலவு செய்யப்பட்டாலும் கடற்கரைகள் ஏனோ என்றுமே குப்பைகளாகவே காட்சியளிக்கின்றன.
கடற்கரையை சுற்றியுள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றை தூய்மையாக வைக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்படி கடற்கரைகள் சுத்தமாக இருந்தால் மட்டுமே அவை பயனளிக்கும். சுற்றுலா பயணிகளை அதிகமாக கவரும் கடற்கரைகள் குப்பை இல்லா ஒரு இடமாக இருந்ததால் சுற்றுசூழல் மாசுபடாமலும் வணிகம் சார்ந்த வளர்ச்சியையும் பெருக்கும்.
இயற்கை எழில் கொஞ்சும் கேரளா :
'கடவுளின் சொந்த தேசம்' என வர்ணிக்கப்படும் கேரளாவில் பிரமிக்கவைக்கும் ஏராளமான கடற்கரைகள் அமைந்துள்ளன. அது மட்டுமின்றி கேரளாவில் வைகதாஷ்டமி பண்டிகை, உணவு வகைகள், பேக் வாட்டர்ஸ் மற்றும் ஏரளமான கலாச்சார மரபுகளை கொண்டாடுவதில் பெயர் பெற்ற நகரம். நியூயார்க் டைம்ஸ் பட்டியலின் படி சுற்றுலா செல்ல சிறந்த 52 இடங்களின் பட்டியலில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.
ரஹ்மான் வெளியிட்ட வீடியோ :
இப்படி பட்ட சிறப்பு வாய்ந்த கடற்கரையை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்? ஊராட்சி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய சுத்தம் செய்யும் பணியை சுற்றுலா பயணி ஒருவர் செய்துள்ளார். நமது நாட்டிற்கு விருந்தாளியாக வந்த ஒருவர் கடற்கரையை சுத்தம் செய்யும் வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மலையாள நடிகர் ரஹ்மான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் கடற்கரை ஓரத்தில் இருக்கும் குப்பைகளை அகற்றும் வீடியோவில் பின்னணியில் ஒருவர் வெகேஷனுக்கு வந்த வெளிநாட்டவர் நம் நாட்டை சுத்தம் செய்கிறார் ஆனால் இந்த நாட்டில் அதை செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், பொதுமக்கள், குடிமக்கள் என யாருமே அதை செய்ய முன்வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.