Nepoleon : இவரோட எப்படி குடும்பம் நடத்த முடியும்? நெப்போலியனுக்கு நோ சொன்ன மனைவி... திருமணத்தில் ஏற்பட்ட சலசலப்பு
Nepolean : நடிகர் நெப்போலியன் திருமணத்துக்காக பெண் பார்க்கும் போது அவரின் மனைவி இவரை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்காமல் வேண்டாம் என மறுத்துள்ளார். அதற்கு என்ன காரணம் தெரியுமா ?
தமிழ் சினிமாவின் உயரமான கரடு முரடான நடிகர்களில் ஒருவரான நடிகர் நெப்போலியன் கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எஜமான், எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். ஹீரோவாக ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவர் வில்லனாக நடித்த படங்களே மக்கள் மனதில் பெரிய அளவில் பதிந்தன.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மட்டுமின்றி ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். சினிமா துறையில் கலக்கிய இவர் அரசியலிலும் இறங்கி தன்னுடைய அடையாளத்தை முத்திரை பதித்தார். 2009ம் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு பெரம்பலூர் தொகுதியின் எம்பியாக தேர்வானார். மேம்பாட்டு துறையின் இணை அமைச்சராகவும் பதவி வகித்தார். ஜீவன் டெக்னாலஜிஸ் என்ற பெயரில் ஐடி நிறுவனம் ஒன்றையும் துவங்கினார்.
நடிகர் நெப்போலியன் அவரது மனைவி ஜெயசுதா தம்பதியருக்கு தனுஷ், குணால் என இரு மகன்கள் உள்ளனர். பின்னர் திரை வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் விட்டு விலகி குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலானார். அதற்கு காரணம் அவரின் மூத்த மகன் நான்கு வயது இருக்கும் போதே தசை சிதைவு என்ற அரிய வகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஒரு சில சிகிச்சைகளுக்கு பிறகு மகனின் உடல்நிலையில் சிறு மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் முழுக்கையாக சரியாகவில்லை. அதனால் மூத்த மகன் தனுஷ் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று குடும்பத்துடன் அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
அவ்வப்போது ஒரு சில படங்களில் தலைகாட்டி வருகிறார். தற்போது 25 வயதாகும் மகன் தனுஷ் திருமண ஏற்பாடுகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் தான் திருமணம் நிச்சயதார்த்தம் மணமகன் இல்லாமலேயே நடைபெற்றது. மணமகள் நெல்லையை சேர்ந்தவர் என்பதால் அந்த ஊர் வழக்கப்படி மணமகள் வீட்டுக்கு வந்து மணமகன் தாலி கட்ட வேண்டும். ஆனால் தனுஷின் உடல் நிலையில் பாதிப்பு இருப்பதால் ஜப்பானில் திருமணத்தை வைக்க ஏற்பாடு செய்துள்ளார். நிச்சயதார்த்த புகைப்படங்களும் வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகின.
இந்நிலையில் யூடியூபர் இர்ஃபானை சந்தித்து மகனின் பத்திரிகையை வைத்து ஜப்பானுக்கு அழைத்துள்ளார். நெப்போலியன் மகன் திருமணம் தற்போது களைகட்டி வரும் இந்த வேளையில் நெப்போலியன் திருமணத்தின் போது ஏற்பட்ட ஒரு சலசலப்பை பற்றின தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சினிமாவில் தனக்கென ஒரு அடையாளம் கிடைத்த பிறகு நெப்போலியனுக்கு பெண் பார்க்கும் படலம் நடந்தேறியுள்ளது. அப்போது கல்லூரி படித்து வந்த அவரின் மனைவியின் ஜாதகத்துக்கும் இவருடைய ஜாதகத்துக்கும் 9 பொருத்தங்கள் அமைந்துள்ளது.
மாப்பிள்ளை யார் என அவரின் மனைவி கேட்டுள்ளார். அப்போது இவரை காட்டி இது தான் மாப்பிள்ளை என சொன்னதும் அவரின் மனைவி எனக்கு இவர் வேண்டாம், இவரை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்து விட்டாராம். அதற்கு அவர் சொன்ன காரணம் தான் அல்டிமேட்டாக இருத்தது.
எஜமான் படத்தில் வயிற்றில் உள்ள கருவையே கலைக்கும் அளவுக்கு கொடுமைக்காரரான இவருடன் எல்லாம் எப்படி வாழ முடியும் என சொல்லி இருக்கிறார். பின்னர் நெப்போலியன் மனைவியின் குடும்பத்தார் தான் அதெல்லாம் வெறும் சினிமாவில் நடிப்பிற்காக மட்டும் தான். நிஜ வாழ்க்கையில் அவர் மிகவும் நல்லவர். விசாரிக்காமல் பெண் கொடுப்பானா என்றெல்லாம் சொல்லி மகளை சமாதானம் செய்து வைத்துள்ளார் நெப்போலியன் மாமனார். பிறகு தான் அவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.