மேலும் அறிய

ஒரு படத்தின் வெற்றிக்கு தனி நபர் காரணமா இருக்க முடியாது - நடிகர் நட்டி ஓபன் டாக்!

இப்போதெல்லாம் ஒரு படத்தை உருவாக்குவது எளிதான காரியம் கிடையாது. இப்போதெல்லாம், ஒரு படத்தையும் நன்றாக சந்தைப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் படம் எடுப்பது சாதாரண விஷயமல்ல என நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் நடராஜன் சுப்பிரமணியம். சினிமாவில் நட்டி என அழைக்கப்படும் இவர் தமிழ் சினிமா தொடங்கி இந்தி சினிமா வரை அனைவருக்கும் பரீட்சையமானவர். 1999 ஆம் ஆண்டு லாஸ்ட் ட்ரெயின் டூ மகாகலி என்ற குறும்படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தமிழில் விஜய் நடித்த யூத் படம் மூலம் எண்ட்ரீ கொடுத்தார். 

இதன்பின்னர் தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பணியாற்றியுள்ளார். அதேசமயம் நடிகராக நாளை என்ற் படத்தின் மூலம் அறிமுகமானார். முத்துக்கு முத்தாக, சதுரங்க வேட்டை, நம்ம வீட்டு பிள்ளை, கர்ணன், இன்ஃபினிட்டி, மகாராஜா, பிரதர், கங்குவா என பல படங்கள் மூலம் நடிகராகவும் பரீட்சையமானார். அடுத்ததாக சூர்யா நடிக்கும் கருப்பு, அதர்வா நடிக்கும் இதயம் முரளி ஆகிய இரு படங்களிலும் முக்கிய வேடத்தில் நட்டி நடித்து வருகிறார்.

இதனிடையே நட்டியிடம், தற்போதைய சூழலில் திரைப்படத்துறை சந்திக்கும் சவால்கள் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சினிமா எப்போதும் ஒரு குழு முயற்சியாகும். ஒரு படத்தின் வெற்றிக்கு குறிப்பிட்ட சிலர்  மட்டுமே காரணம் என்று யாரும் கூற முடியாது. இப்போதெல்லாம் ஒரு படத்தை உருவாக்குவது எளிதான காரியம் கிடையாது. இப்போதெல்லாம், ஒரு படத்தையும் நன்றாக சந்தைப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. அதேசமயம் ஒரு படம் நன்றாக இருந்தால் தியேட்டர் காட்சிகள் இயல்பாகவே அதிகரிக்கும். அப்படியான ஒரு படம் தியேட்டருக்கு வந்தவுடன் அது மக்களின் படமாக மாறும். ரசிகர்கள் அதை விரும்பலாம் அல்லது விரும்பாமல் போகலாம். அதுதான் படத்தின் விதி என்று நட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் நாளை படத்தில் நடிக்க இருந்த ஒரு நண்பருக்கு நான் சென்னை தமிழ் கற்றுக் கொடுக்க முயற்சித்த நிலையில் நடிப்பு துறைக்குள் வந்தேன். அந்த நண்பரால் ஏற்கனவே கமிட்டான பணிகளால் அதில் நடிக்க முடியாதபோது நான் நடித்தேன். 1980களின் பிற்பகுதிகளிலும், 1990களின் முற்பகுதிகளிலும் நடிகர், நடிகைகள் ஷூட்டிங் வரவில்லை என்றால் அவர்கள் வரும்முன் அந்தந்த கேரக்டரின் உடைகளை அணிந்து கொண்டு கேமராவுக்கு பின்னால் நின்று ஷாட் எடுக்க வேண்டியிருந்தது. இதன் மூலம் இயல்பாகவே நடிப்பை வளர்ப்பதற்கான நேரம் கிடைத்தது.

மேலும் தான் ஒளிப்பதிவு செய்து தனுஷ் நடித்த ராஞ்சனா படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ஏஐ தொழில்நுட்ப உதவியால் சமீபத்தில் மாற்றி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பேசிய நட்டி, அசல் எப்போதும் அசல் தான். நீங்கள் அசலில் சோகமான முடிவை வைத்து, பின்னர் தொழில்நுட்ப உதவியுடன் மகிழ்ச்சியான ஒன்றாக மாற்றினால் மக்கள் அதை ரசிக்காமல் போகலாம் என அவர் கூறினார். 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget